
துபாயில் திருடப்பட்ட ஆப்பிள் ஏர்பாட்ஸ்களை பாகிஸ்தானுக்கு பயணம் செய்து பிரிட்டிஷைச் சேர்ந்த youtuber மீட்டுள்ளார்.
பிரிட்டிஷ் யூடியூபரான லார்ட் மைல்ஸ் ஒரு வருடத்திற்கு முன்பு துபாய் ஹோட்டலில் தனது ஏர்பாட்ஸை தவறவிட்டிருக்கிறார். ஆப்பிள் ஏர்பாட்ஸை கண்டுபிடிக்க அதில் இருக்கும் அம்சத்தை பயன்படுத்தி உள்ளார். ’Find my’ என்ற அம்சத்தை பயன்படுத்தி ட்ராக் செய்துள்ளார்.
அப்போது அது பாகிஸ்தானில் இருப்பதாக அவருக்கு தெரியவந்துள்ளது. உள்ளூர் காவல்துறையின் உதவியுடன் லார்ட் அந்த இடத்தை கண்டுபிடித்து அவர்களிடமிருந்து அந்த ஏர்பாட்ஸை மீட்டுள்ளார்.
இது குறித்து தனது சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொண்ட லார்ட் விசாவிற்காக காத்திருந்தபோது துபாயின் அறையில் தனது ஏர்பாட்ஸ்கள் திருடப்பட்டதாகவும் பின்னர் அதை பைண்ட் மை ( find my) என்ற அம்சத்தை பயன்படுத்தி அது பாகிஸ்தானின் ஜீலம் வரை சென்றது குறித்து கண்காணித்ததாகவும் தெரிவித்தார்.
இந்த பதிவு வைரல் ஆனதை அடுத்து பாகிஸ்தானின் ஜீலம் பகுதியில் உள்ளூர் போலீசார் விசாரணை செய்தபோது, ஒரு பாகிஸ்தானியிடம் அந்த ஏர்பாட்ஸ்கள் இருந்துள்ளன.
அவரிடம் விசாரித்த போது துபாயில் ஒரு இந்தியரிடம் இருந்து அவற்றை வாங்கியதாக அந்த நபர் கூறியிருக்கிறார்.
லார்ட் அந்த ஏர்பாட்ஸ்கள் வாங்குவதற்காக பாகிஸ்தானுக்கு பயணம் செய்து ஒரு வருடத்திற்கு முன்பு தவறவிட்டதை உள்ளூர் போலீசார் உதவியுடன் மீட்டுள்ளார்.
ஒரு பாகிஸ்தானிய நபருக்கு இந்திய நாட்டவரால் இந்த ஏர்பாட்ஸ்கள் விற்கப்பட்டுள்ளது குறித்தும், அவர் திருடப்பட்ட பொருட்களை வாங்கி விற்றதற்காக கைது செய்யப்பட்டுள்ளது குறித்தும் லார்ட் தனது சமூக ஊடக பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.