
பெங்களூரு: கர்நாடக முதலமைச்சராக ஐந்து ஆண்டு பதவிக் காலத்தை நிறைவு செய்வேன் என்று சித்தராமையா இன்று உறுதியாக தெரிவித்தார். இந்தச் சூழலில், ‘கட்சித் தலைமையின் முடிவைப் பின்பற்றுவதைத் தவிர வேறு வழியில்லை’ என துணை முதல்வர் டி.கே. சிவகுமார் கூறினார்.
கர்நாடக முதல்வர் பதவியிலிருந்து சித்தராமையாவை மாற்றிவிட்டு, டி.கே.சிவகுமார் முதல்வராக பதவியேற்பார் என கடந்த சில வாரங்களாக பலமான விவாதங்கள் எழுந்தன. சிவக்குமாருக்கு ஆதரவாக பல எம்.எல்.ஏக்களும் குரல் எழுப்பினர். இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சித்தராமையா, “நான் ஐந்து ஆண்டுகள் முதல்வராக இருப்பேன். உங்களுக்கு இதில் ஏதேனும் சந்தேகம் இருக்கிறதா?” என்று கேள்வி எழுப்பினார்.