
திருப்புவனம்: போலீஸார் விசாரணையில் கொல்லப்பட்ட அஜித்குமார் வழக்கு குறித்து விசாரிக்க உயர் நீதிமன்றம் நியமித்த மாவட்ட நீதிபதி திருப்புவனத்தில் விசாரணை நடத்தினார்.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் தனிப்படை போலீஸார் கொடூரமாக தாக்கியதில் உயிரிழந்தார். இந்த வழக்கை நேற்று உயர் நீதிமன்றம் மதுரை கிளை விசாரித்தது. அப்போது உயர் நீதிமன்ற நீதிபதிகள் காவல்துறையினரிடமும், அரசிடமும் சரமாரியாக பல்வேறு கேள்விகளை முன்வைத்தனர்.