
தார் ரோட்டில் வாகனம் ஓட்டிகொண்டிருக்கிறீர்கள். அந்த ரோடு புதிதாக போட்டது தான். அதனால், எங்கேயும் மேடு, பள்ளம் இல்லை. ஆனால், ஒரே ஒரு பிரச்னை தான்.
அது அந்த ஸ்மூத்தான தார் ரோட்டில் அங்காங்கே மரங்கள் இருக்கும். அவ்வளவு தான். இது கற்பனை அல்ல.
பீகார் மாநிலத்தின் ஜெகனாபாத், பாட்னா-கயா பிரதான சாலையின் உண்மையான நிலை இது.
என்ன செய்தது மாவட்ட நிர்வாகம்?
இந்தப் பகுதியில் சாலையை விரிவுப்படுத்த, மரங்களை வெட்ட வனத்துறையின் அனுமதி தேவைப்பட்டிருக்கிறது. மாவட்ட நிர்வாகம் வனத்துறையிடம் அனுமதி கேட்டுள்ளது.
அதற்கு வனத்துறை, இங்கே வெட்டும் மரங்களுக்கு பதிலாக, வேறு பகுதியில் 14 ஹெக்டேர் நிலத்தை வன நிலமாக மாற்றி தர வேண்டும் என்று கூறியுள்ளது. வனத்துறையின் இந்த நிபந்தனையை மாவட்ட நிர்வாகத்தால் செய்துகொடுக்க முடியவில்லை.
அதனால், வேறு வழியில்லாமல், ரூ.100 கோடி மதிப்பில் சாலையை அகலப்படுத்தி, மரங்களை அகற்றாமல் அப்படியே சாலையை விரிவுபடுத்தியுள்ளனர்.
வாகனோட்டிகளின் பயம்!
இந்த மரங்களும் நேர்கோட்டில் இல்லை. ஆங்காங்கே தான் இருக்கின்றன. இதனால், வாகனோட்டிகளுக்கு விபத்து ஏற்படுமோ என்று பயம் அதிகரித்துள்ளது.
மாவட்ட நிர்வாகத்தின் இந்த செயல் குறித்த உங்களுடைய கருத்தை கமென்ட் செய்யுங்க மக்களே!