• July 2, 2025
  • NewsEditor
  • 0

மலையாளத் திரையுலகின் முக்கியமானவர் பாலசந்திர மேனன். இயக்குநர், கதாசிரியர், நடிகர் எனப் பல்வேறு துறைகளில் இயங்கிய இவர், பத்மஶ்ரீ விருதையும் வென்றிருக்கிறார்.

1980-களில் 40 திரைப்படங்களை இயக்கியுள்ளார். நூற்றுக்கும் மேற்பட்ட மலையாளத் திரைப்படங்களில் நடித்துள்ளார். இதற்கிடையில், மலையாளத் திரையுலகில் பெண்கள் அனுபவிக்கும் பாலியல் தொல்லைகள் குறித்து ஹேமா கமிட்டி கடந்த ஆண்டு அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தது.

பாலசந்திர மேனன்

அதைத் தொடர்ந்து, மலையாள நடிகை மினு முனீர் (45). இயக்குநரும், நடிகருமான பாலசந்திர மேனன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இந்த நிலையில், அக்டோபர் 2, 2024 அன்று மலையாள நடிகை மினு முனீர் (45) மீது பாலசந்திர மேனன் புகார் பதிவு செய்தார்.

அந்தப் புகாரில், எந்த அடிப்படை ஆதாரமும் இல்லாமல், என் புகைப்படத்தைப் பகிர்ந்து, என்னைப் பற்றி ஆன்லைனில் தொடர்ந்து அவதூறான கருத்துகளை வெளியிட்டிருக்கிறார். ஆபாசமான கருத்துக்களை தெரிவித்து அவதூறு பரப்பியிருக்கிறார். அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

அதன் அடிப்படையில், நடிகை மினு முனீர் மீது பாரதிய நியாய சன்ஹிதாவின் பிரிவு 351(2) (குற்றவியல் மிரட்டல்), தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 67 (ஆபாசமான விஷயங்களை மின்னணு முறையில் வெளியிடுதல் அல்லது அனுப்புதல்) மற்றும் கேரள காவல் சட்டத்தின் பிரிவு 120(o) (தொடர்பு மூலம் தொல்லை ஏற்படுத்துதல்) உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் FIR பதிவு செய்யப்பட்டது. இந்தப் புகாருக்கு எதிராக நடிகை மினு முனீர் கேரள நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார்.

மினு முனீர்
மினு முனீர்

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், அவரின் மனுவை தள்ளுபடி செய்து, காவல்நிலையத்தில் ஆஜராகும்படி உத்தரவிட்டது. அதன் அடிப்படையில், கடந்த ஜூன் 30 அன்று கொச்சியில் உள்ள சைபர் கிரைம் காவல் நிலையத்தில் முனீர் ஆஜராகி காவலில் எடுக்கப்பட்டார். அவரை நீதிமன்றத்தில் ஒப்படைத்தது காவல்துறை. இந்த வழக்கை விசாரித்தப்பிறகு உயர் நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியிருக்கிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *