• July 2, 2025
  • NewsEditor
  • 0

திருப்பூர்: அரசி​யல் அழுத்​தங்​கள் இருப்​ப​தால் ரிதன்யா தற்​கொலை வழக்கை சிபிஐ விசா​ரிக்க வேண்​டும் என்று அவரது குடும்​பத்​தினர் கோரிக்கை வைத்​துள்​ளனர். திருப்​பூர் மாவட்​டம் அவி​நாசி கைகாட்​டிபுதூர் ஜெயம் கார்​டனைச் சேர்ந்​தவர் கவின்​கு​மார் (29). இவரது மனைவி ரிதன்யா (27). திரு​மணமான 3 மாதங்​களில் ரிதன்யா விஷமருந்தி தற்​கொலை செய்​து​கொண்​டார்.

தனது தற்​கொலைக்கு கணவர் மற்றும் அவரது குடும்​பத்​தினர்​தான் காரணம் எனக் கூறி தந்​தைக்கு வாட்​ஸ்​அப் ஆடியோ பதிவு அனுப்​பி​யிருந்​தார். இதையடுத்​து, ரிதன்யா கணவர் கவின்​கு​மார், மாம​னார் ஈஸ்​வர மூர்த்​தி, மாமி​யார் சித்​ராதேவி ஆகியோர் மீது துன்​புறுத்​தல் மற்​றும் தற்​கொலைக்கு தூண்​டு​தல் ஆகிய பிரிவு​களின் கீழ் போலீ​ஸார் வழக்குப் பதிவு செய்​து, கவின்​கு​மார், ஈஸ்​வரமூர்த்​தி​யைக் கைது செய்​துள்​ளனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *