
ஒன் பிக் அண்ட் பியூட்டிஃபுல் பில்லினால் மீண்டும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்க் இடையே சலசலப்பு எழுந்துள்ளது.
நீண்ட நாள்களுக்கு பிறகு, இந்த பில்லிற்கு எதிராக, எலான் மஸ்க் பதிவிட, ட்ரம்போ, “இதுவரை வரலாற்றில் இல்லாத அளவிற்கு, எலானுக்கு அதிக சலுகைகள் கிடைத்துள்ளது. இந்த சலுகைகள் இல்லையென்றால், அவர் தனது கடையை மூடிவிட்டு, தென் ஆப்பிரிக்காவிற்கு சென்றுவிட வேண்டியது தான்” என்று கடுமையாக பதிவிட்டிருந்தார்.
இந்த நிலையில், நேற்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் ட்ரம்பிடம், “நீங்கள் எலான் மஸ்கை அவரது நாட்டிற்கு அனுப்ப போகிறீர்களா?’ என்று கேட்கப்பட்டது.
‘எனக்கு தெரியவில்லை. அது குறித்து பார்க்க வேண்டும். DOGE-ஐ எலானை பார்க்க சொல்ல வேண்டும். DOGE என்றால் என்னவென்று உங்களுக்கு தெரியுமா? அது ஒரு அசுரனை போன்றது. அது எலான் பின் சென்று, அவரை விழுங்கக் கூட செய்யலாம். அது பயங்கரமாக இருக்காதா? அவர் மிக அதிக மானியங்களை பெறுகிறார்” என்று பதிலளித்துள்ளார்.