
ஜெய் நடிக்கும் ரொமான்டிக் த்ரில்லர் படத்துக்கு ‘சட்டென்று மாறுது வானிலை’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இதில், மீனாட்சி கோவிந்தராஜன் நாயகியாக நடித்துள்ளார். யோகிபாபு, கருடாராம், ஸ்ரீமன் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைக்கிறார். ரிச்சர்ட் எம். நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்தை ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய பாபு விஜய், பிவி ஃபிரேம்ஸ் சார்பில் தயாரித்து, இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு முடிந்த நிலையில் இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகின்றன. ஆகஸ்ட் மாதம் வெளியாக இருக்கும் இந்தப் படத்தின்முதல் தோற்றத்தைப் படக்குழு வெளியிட்டுள்ளது.
“பிரபஞ்சம் அடுத்தடுத்து மறைத்து வைத்திருக்கும் ஆச்சரியங்கள் ஏராளம். ஒருவன் வாழ்வில் அடுத்தடுத்து ஏற்படும் ஆச்சரியம், ஆனந்தம், அதிர்வுகள் தான் இக்கதையின் மையம். நம்நாட்டில் நிகழ்கிற, தொடர்ந்து நிகழப்போகிற பெரும் ஆபத்தைப் பற்றி இந்தப்படம் அழுத்தமாகப் பேசியுள்ளது. காதலும் களவும் என அன்பின் ஐந்திணையைக் கொண்டு, ரொமான்டிக் த்ரில்லராக படம் உருவாகியுள்ளது” என்றது படக்குழு.