• July 2, 2025
  • NewsEditor
  • 0

திருப்புவனம்: வரு​மானம் ஈட்​டிய அஜித்​கு​மாரை இழந்​த​தால், அவரது குடும்​பம் ஆதர​வற்ற நிலை​யில் தவித்து வரு​கிறது. சிவகங்கை மாவட்​டம் திருப்​புவனம் அருகே மடப்​புரத்​தைச் சேர்ந்​தவர் மால​தி. இவர் மதுரை மாவட்​டம் சோழ​வந்​தானைச் சேர்ந்த பால​குருவை திரு​மணம் செய்​தார். இவர்​களது மகன்​கள் அஜித்​கு​மார், நவீன்​கு​மார். 20 ஆண்​டு​களுக்கு முன்​னர் பால​குரு உயி​ரிழந்த நிலை​யில், தனது 2 குழந்​தைகளு​டன் மடப்​புரத்​துக்கு வந்த மால​தி, உறவினர்​கள் ஆதர​வுடன் வாடகை வீட்​டில் வசித்து வரு​கிறார்.

இவர் தென்னை தட்டி முடைந்​து, 2 மகன்​களை​யும் படிக்க வைத்​தார். 10-ம் வகுப்பு வரை படித்த அஜித்​கு​மார், பூக்​கடை​யில் வேலை பார்த்து வந்​தார். இவரது தம்பி நவீன்​கு​மார் பொறி​யியல் படிப்பு படித்​து​விட்​டு, வேலை இல்​லாமல் உள்​ளார். இதனால் அஜித்​கு​மார் வரு​மானத்​தில் குடும்​பம் நடந்து வந்​தது. 2 மாதங்​களுக்கு முன்​பு​தான் அஜித்​கு​மார் தனி​யார் நிறு​வனம் மூலம் தற்​காலிக காவலா​ளி​யாக மடப்​புரம் பத்​ர​காளி​யம்​மன் கோயி​லில் சேர்ந்​தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *