• July 1, 2025
  • NewsEditor
  • 0

நெல்லை மாவட்டம், காந்திநகர் பகுதியில் ஆதரவற்ற நிலையில் மனநலம் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் புதிய வாழ்கை வாழ ”பேயன் ஆர் சோயா” அமைப்பு எட்டு இல்லங்களை நடத்தி வருகிறது.  இந்த ‘மீண்டும்” இல்லத்தில் வாழ்ந்து வந்த பயனாளர் பாலேஸ்வர்.  இவர் ’ஸ்கிசோப்ரினியா’  என்ற  நோயால் பாதிக்கப்பட்ட நிலையில்,  சிவகங்கை குழுவினரால் கடந்த 18.06.2022 அன்று மீட்கப்பட்டார்.  சிகிச்சைக்கு பின் அவரது  குடும்பத்தை பற்றிய தகவல் அப்போது தெரியாததால் கடந்த  20.11.2023 அன்று திருநெல்வேலி ‘மீண்டும்” இல்லத்திற்கு மாற்றப்பட்டார்.  

நெல்லை ஆட்சியர் அலுவலகம்

இவர் மிக விரைவாகவே இங்கு குணமாகி பழைய ஞாபங்களை ஒருங்கிணைப்பாளர் திவ்யாவிடம் பகிர ஆரம்பிக்க ஒருங்கிணைப்பாளர் திவ்யா , பீகாரில் கயாவில் உள்ள காவல்துறையை நேரடியாகத் தொடர்பு கொண்டுள்ளார். கயா காவல்துறை மூலம் அவரது குடும்பத்தினரையும் வீட்டு முகவரியைத் தேட உதவி கோரினார்.  `பல முறை பல நாள் முயற்சி வெற்றி கிடைத்தது எங்கள் முயற்சிகள் வீண்போகாமல் அவரது மனைவி அலோபதி மற்றும் அவரது மகள் ரீட்டா ஆகியோர் கயா காவல் நிலையத்தில் வீடியோ அழைப்பு மூலம் அவருடன் பேச முடிந்தது.

அதன்பின் மகன் சனோஜ் குமார் மற்றும் உறவினர்கள் அணில், சஞ்சீவ் ஆகியோர் நெல்லையில் இருப்பதாகத் தகவல் அறிந்து பாலேஸ்வரைப் பார்ப்பதற்காக வந்திருந்தனர். அவர்களிடம் அவரைப் பற்றி விசாரித்ததில் அவருக்கு நான்கு குழந்தைகள் (3 ஆண் 1 பெண்) இருந்ததாகவும் சமீபத்தில் மூத்த மகன் சாலை விபத்து ஒன்றில் இறந்து விட்டதாகவும் கூறினார்கள். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பாக மனநலம் பாதிக்கப்பட்டு சொந்த ஊரான பீகார் மாநிலம் கயா பகுதியை விட்டு வெளியேறியுள்ளார்.

நெல்லை ஆட்சியர் அலுவலகம்

தற்போது மகன் தனது தந்தையை உயிருடன் நேரில் பார்த்ததை நம்பமுடியாமல் கண்ணீர்விட்டார்.  பாலேஸ்வரர், அவர்களை பீகாரில் இருந்து வந்து அவரது மகன் மற்றும் உறவினர்களிடம் குடும்ப நிலை பற்றி கேட்டறிந்து, மருத்துவ ஆலோசனைகளையும் வழங்கி, மாவட்ட ஆட்சியர் சுகுமார் ஊருக்கு வழி அனுப்பி வைத்ததோடு, சோயா பொறுப்பாளர் சாராதாம்மாள், சோயா மாரிமுத்து மற்றும் சமூகப் பணியாளர் டேவிட் ஆசீர்  ஆகியோரையும் பாராட்டினார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *