• July 1, 2025
  • NewsEditor
  • 0

சீனாவை சேர்ந்த 50 வயதான ஜின் என்பவர் ஒரு தொழில் முனைவோராக இருந்து வருகிறார். அவரின் சொந்த மகனின் வகுப்புத் தோழனை மணம் முடித்து தற்போது கர்ப்பமாக இருப்பதாக சமூக ஊடகங்களில் அறிவித்துள்ளார்.

கணவர் மகன் என ஒரு குடும்பமாக வாழ்ந்து வந்த ஜின், தனது 30 வயதில் விவாகரத்து பெற்றிருக்கிறார். அதன் பின்னர் தனது மகனை தானே வளர்த்து வந்திருக்கிறார்.

இதற்கிடையில் ஜின் தன்னைவிட 20 வயது குறைவான இளையவர் மீது காதல் கொண்டிருக்கிறார். அதுவும் மகனின் வகுப்புத் தோழனான ரஷ்யருடன் காதல் கொண்டிருக்கிறார்.

காதல்

ஜின்னின் மகன் கைகாய், ரஷ்ய வகுப்பு தோழன் டெஃபு உட்பட மூன்று பேருக்கு தனது வீட்டில் ஜின் விருந்து ஏற்பாடு செய்திருக்கிறார். அப்போது இருந்து தொடங்கி இருக்கிறது இந்த காதல் கதை.

சரளமாக சீன மொழி பேசிய டெஃபு, ஜினின் சமையல் மற்றும் விருந்தோம்பலால் கவரப்பட்டதாக சைவுத் மார்னிங் போஸ்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

20 வயது வித்தியாசம் மற்றும் 30 செ.மீ உயர வித்தியாசம், கலாச்சார வேறுபாடுகள், கடந்தகால திருமண அனுபவத்தை நினைத்து, ஜின் ஆரம்பத்தில் நிராகரித்திருக்கிறார்.

அதன்பின்னர் தனது மகனின் ஆதரவுடன், அந்த காதலுக்கு மற்றொரு வாய்ப்பு கொடுக்க முடிவு செய்து, இந்த ஆண்டு தொடக்கத்தில் ஜின் மற்றும் டெஃபு திருமணம் செய்துக்கொண்டுள்ளனர். தற்போது கர்ப்பதையும் அறிவித்திருக்கிறார்.

தனது காதல் கதையை சமூக ஊடகங்களில் பகிர்ந்திருக்கிறார் ஜின். இந்த பதிவை எடுத்து பலரும் இதற்கு கமெண்ட் செய்து வருகின்றனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *