• July 1, 2025
  • NewsEditor
  • 0

நான் பயன்படுத்தும் ஷூக்கள் பழசானதும் அதனை குப்பைத்தொட்டியில் தூக்கி எறிகிறோம். இவ்வாறு எறியும் ஷூக்களால் மனிதர்களுக்கு பாதிப்புகள் ஏற்படுகின்றன என்பது குறித்து நம்மில் பலருக்கும் தெரியாது.

இந்தியாவைப் பொறுத்தவரை 65% காலணிகள் தயாரிக்கப்படுகின்றன. குறிப்பாக ஆக்ராவில் ஒரு நாளைக்கு 10 லட்சம் ஜோடி ஷூக்கள் தயாரிக்கப்படுகின்றன. இதனால் பல டன் கழிவுகள் வெளி வருகின்றன.

ஷூக்கள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பொருள்களில் பெரும்பாலானவை மறுசுழற்சி செய்ய முடியாதவையாக உள்ளன.

இப்படி மறுசுழற்சி செய்ய முடியாத அளவிற்கு உற்பத்தி செய்யப்படும் காலணிகள் குப்பை கிடங்களுக்கு சென்றால் அவை மீண்டும் உணவு சங்கிலி மூலம் மனிதர்களை தான் வந்து சேரும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர். பல ஆண்டுகளுக்கு முன்பு நீங்கள் தூக்கி எறியப்பட்ட ஷூக்கள் இன்றும் அதே குப்பை கிடங்குகளில் கிடப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகக் கூறுகின்றனர்.

தேவைக்கு மீறியும், ஆடம்பரத்திற்காகவும் ஷூக்களை வாங்கி வீடுகளில் குவிக்க வேண்டாம் என்றும் வலியுறுத்துகின்றனர்.

பிபிசி தகவலின் படி, 800 கோடி உலக மக்களின் தேவையைப் பூர்த்திசெய்ய ஆண்டுதோறும் 24 பில்லியனுக்கும் அதிகமான ஷூக்கள் தயாரிக்கப்படுகின்றன.

இவ்வாறு தயாரிக்கப்படும் ஷூக்கள் மறுசுழற்சி செய்ய முடியாத வகையில் தயாரிக்கப்படுகின்றன, இவற்றில் பெரும்பாலும் கார்சினோஜன் எனப்படும் புற்று நோயை உண்டாக்கக்கூடிய மூலக்கூறு அதில் பயன்படுத்தப்படுகின்றது.

அவ்வாறு தூக்கி எறியப்படும் ஷூக்கள் முறையாக அப்புறப்படுத்தப்படாவிட்டால் நிலத்தில் அவை நச்சுத்தன்மையை வெளியிடும், நீர்நிலைகளில் கிடக்கும் ஷூக்களை மீன்கள் உண்பதாலும் மீண்டும் மனிதர்களின் உணவு சங்கிலிக்கு வந்துவிடும், என்று சுற்றுச்சூழல் ஆர்வலர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

இதற்கு மாற்று வழி என்ன?

Greensole என்ற பவுண்டேஷன், அரிசி உமி, விவசாயக் கழிவுகள், மரக் கலவைகள் போன்றவற்றைக் கொண்டு காலணிகளை தயாரித்து வருகின்றனர். இது போன்ற காலணிகளை மக்கள் வாங்குவதால் சுற்றுச்சூழலுக்கு பங்களிப்பதாக பவுண்டேஷன் சார்பில் கூறப்பட்டுள்ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *