
சைக்கோ கொலையாளியை அடையாளம் காண, நாயகனின் புத்திசாலித்தனத்தைப் பின்தொடரும் குற்றப் புலனாய்வுப் படங்களே தமிழ் சினிமாவில் அதிகமும் வெளி வந்திருக்கின்றன. ‘போர்த்தொழில்’, ஒரு மூத்த அதிகாரிக்கும் ஒரு புதிய, இளம் அதிகாரிக்கும் இடையிலான முரண்களின் வழியே கொலை விசாரணைக் களத்தை உணர்வுபூர்வமாக விரித்தது. அந்த வரிசையில் ஒரு மாறுதலாக, துணைக் கதாபாத்திரம் ஒன்றின் தனித்த, அபூர்வத் திறமையைப் பயன்படுத்திக்கொள்ளும் நாயகன், கொலையாளியை எப்படி நெருங்குகிறார் என்பதுதான் இப்படத்தின் சிறப்பு!
இதில் நாயகன் ஒரு பிரபலமான நட்சத்திரமாக இருந்தும் தன்னுடைய புஜபலப் பராக்கிரமத்தைக் காட்டவில்லை என்பதும் கவனிக்க வைக்கிறது.