• July 1, 2025
  • NewsEditor
  • 0

இன்ஃபினிட்டி கிரியேஷன்ஸ் சார்பில் பி.ரவிசந்திரன் தயாரிப்பில், இயக்கிய இயக்குநர் எழில் இயக்கியிருக்கும் படம் தேசிங்கு ராஜா-2.

ஜூலை 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் இந்தப் படத்துக்கு இசையமைப்பாளர் வித்யாசாகர் இசையமைத்திருக்கிறார். நேற்று இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

Desinguraja-2 audio launch

அதில் பேசிய ரோபோ சங்கர், “கால் நூற்றாண்டையும் கடந்து காமெடியில் டஃப் கொடுக்கும் ஒரே இயக்குநர் எழில்சார். குழந்தைகளுக்கு மத்தியில் எனக்கான அங்கீகாரம் கிடைத்தது ‘வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படத்தில்தான். விமல் பேசும்போது அவரின் வாய் அசையவே அசையாது. அப்படியான சர்ட்டிலான நடிகர். இந்தப் படத்தில் ஈகோவே இல்லாமல் எல்லா காமெடி நடிகர்களும் சக நடிகர்களுக்கு ஸ்பேஸ் கொடுத்து நடித்திருக்கிறார்கள். வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் 2 விரைவில் வரவேண்டும் என்ற வேண்டுகோளையும் இந்த மேடையிலேயே வைக்கிறேன்.” என்றார்.

அதைத் தொடர்ந்து பேசிய லொள்ளுசபா சுவாமிநாதன், “விஷாலின் மதகஜராஜா படம் எப்போது ரிலீஸ் ஆனாலும் வெற்றிபெறும் என நான் போன எல்லா இன்டர்வியூவிலும் கூறினேன். அந்தப் படத்தின் மீது எனக்கு அவ்வளவு நம்பிக்கை இருந்தது. அதுபோலதான் இந்தப் படமும் வெற்றிபெறும். படம் தொடங்கியதிலிருந்து முடியும் வரை கலகலவென காமெடி கலாட்டாவாகவே இருக்கும். இயக்குநர் எழிலின் வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன், தேசிங்கு ராஜா-1 வரிசையில் இந்தப் படமும் முக்கிய இடம்பெறும்.” என்றார்.

லொள்ளுசபா சுவாமிநாதன் – ரோபோசங்கர்

இவர்களுக்கு அடுத்து பேசிய இயக்குநரும், நடிகருமான ரவி மரியா,“தேசிங்கு ராஜா-1 க்கும் இந்தப் படத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அது வேறு கதை இது வேறு கதை. நான் காமெடி ஜானருக்குள் நுழைந்ததற்குக் காரணமே ஆர்.கே செல்வமணி சார்தான். ஒரு நிகழ்ச்சியில் நான் அவருடன் வேலை செய்தேன். எழில் சார்தான் அந்த நிகழ்ச்சிக்குப் பொருளாளர். அப்போது எழில் சார் ஒரு கட்டத்தில் ‘உன்னெயெல்லாம் யார்டா வில்லனா போட்டது. நீ சரியான காமெடி பீஸ்’ என நான் காமெடியாகப் பேசுவதைப் பார்த்துக் கூறினார். அப்போதுதான் நீங்களே என்னை காமெடியனாக அறிமுகப்படுத்துங்கள் என்றேன். அதன்பிறகு வந்ததுதான் ‘மனம் கொத்திப் பறவை’.

அதற்குப் பிறகு தேசிங்கு ராஜா படம். வில்லனாகவும், காமெடியனாகவும் கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது. அதற்குப் பிறகு வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்திலும் நான் செய்த காமெடிகள் சூப்பரா வொர்க் அவுட் ஆகியிருந்தது. நடிகர் விமல் அசாத்தியமான நடிகர். நானும் புகழும் லக்‌ஷ்மி மூவி மேக்கர்ஸின் 26-வது படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறோம். அந்தப் படத்தில்தான் எனக்குப் புகழின் திறமை புரிந்தது. எழில் சாரின் 6 படத்தில் நடித்திருக்கிறேன். இந்தப் படத்திலும் எங்களுடைய காமெடி வொர்க் அவுட் ஆகும்” என்றார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *