
சென்னை: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அவதூறாக பேசியதாக, திமுக எம்பி ஆ.ராசாவை கண்டித்து இன்று (1-ம் தேதி) சென்னையில் 7 இடங்களில் தமிழக பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவித்திருந்தார்.
அதன்படி, தண்டையார் பேட்டை மணிக்கூண்டு, பெரம்பூர் மூகாம்பிகை திரையரங்கம், அம்பத்தூர் எஸ்டேட், அயனாவரம், சிவானந்தா சாலை, சைதாப்பேட்டை பனகல் மாளிகை, திருவான்மியூர் திருவள்ளுவர் நகர் நாகாத்தம்மன் கோயில் உள்ளிட்ட 7 இடங் களில் மாலை 3 மணிக்கு ஆர்ப் பாட்டம் நடைபெறும். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அந்தந்தப் பகுதி மூத்த நிர்வாகிகள் தலைமை வகிப்பார்கள் என்று தமிழக பாஜக அறிவித்துள்ளது.