• July 1, 2025
  • NewsEditor
  • 0

மேட்​டூர் / தரு​மபுரி: மேட்​டூர் அணைக்கு நீர்​வரத்து சரிந்​துள்​ள​தால், காவிரி ஆற்​றில் தண்​ணீர் திறப்பு விநாடிக்கு 48,000 கனஅடி​யாக குறைக்​கப்​பட்​டுள்​ளது. கேரளா, கர்​நாட​கா​வில் பெய்த கனமழை காரண​மாக அங்​குள்ள அணை​கள் நிரம்​பின. இதையடுத்து, அணை​களில் இருந்து உபரிநீர் திறக்​கப்​பட்​ட​தால் மேட்​டூர் அணைக்கு நீர்​வரத்து அதி​கரித்​தது.

இதனால் மேட்​டூர்அணை நேற்று முன்​தினம் மாலை 6 மணிக்கு முழு கொள்​ளள​வான 120 அடியை 44-வது தடவை​யாக எட்​டியது. தொடர்ந்​து, அணை​யின் பாது​காப்பு கருதி அணைக்கு வரும் நீர் முழு​வதும் வெளி​யேற்​றப்​பட்​டது. நேற்று முன்​தினம் மாலை விநாடிக்கு 57,732 கனஅடி​யாக இருந்த நீர்​வரத்து நேற்று காலை 58,000 கனஅடி​யாக அதி​கரித்​து. ஆனால், நேற்று மதி​யம் 48,000 கனஅடி​யாக குறைந்​தது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *