
புதுடெல்லி: அரசியல் சாசன முகவுரை மாற்றத்துக்கு உட்பட்டதல்ல என தெரிவித்துள்ள குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், எனினும் நாட்டில் அவசரநிலை அமலில் இருந்தபோது அது மாற்றப்பட்டது என குறிப்பிட்டார்.
கர்நாடகாவைச் சேர்ந்த எழுத்தாளரும் அம்மாநில சட்டமன்றத்தின் முன்னாள் மேலவை உறுப்பினருமான டி.எஸ். வீரய்யா தொகுத்த 'அம்பேத்கரின் செய்திகள்' என்ற நூலை புதுடெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் இன்று (ஜூன் 28) வெளியிட்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர், "எந்தவொரு அரசியலமைப்பின் முகவுரையும் அதன் ஆன்மா. இந்திய அரசியலமைப்பின் முகவுரை தனித்துவமானது. இந்தியாவைத் தவிர வேறு எந்த நாட்டின் அரசியலமைப்பின் முகவுரையும் மாற்றத்துக்கு உள்ளாகவில்லை. முகவுரை மாற்ற முடியாதது. அரசியலமைப்பு வளர்ந்ததற்கான அடிப்படையே முகவுரைதான்.