• June 28, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: சர்வதேச விண்வெளி மையத்தில் உள்ள இந்தியாவின் குரூப் கேப்டன் ஷுபன்ஷு சுக்லாவுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார். அது குறித்த வீடியோவையும் பிரதமர் மோடி பகிர்ந்துள்ளார்.

பிரதமர் மோடி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்த வீடியோவில், “குரூப் கேப்டன் ஷுபன்ஷு சுக்லா உடனான உரையாடல் அற்புதமாக இருந்தது. சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து அவர் தனது அனுபவங்களை என்னோடு பகிர்ந்துகொண்டார். அந்தச் சிறப்புக் கலந்துரையாடலை நீங்களும் பாருங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *