• June 28, 2025
  • NewsEditor
  • 0

தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான ஐசரி கணேஷின்  வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நெஷனல் தயாரிப்பு நிறுவனம் 2025 to 2027 இரண்டு ஆண்டுகளுக்கான தங்களது அடுத்த 10 படங்களின் இயக்குநர்கள் பட்டியலை வெளியிட்டிருந்தது.

அந்தப் பட்டியலில் சுந்தர் சி, வெற்றிமாறன், மாரி செல்வராஜ், கௌதம் வாசுதேவ் மேனன், `96′, `மெய்யழகன்’ இயக்குநர் பிரேம்குமார், `2018 – Everyone Is A Hero’ மலையாள திரைப்பட இயக்குநர் ஜூட் ஆண்டனி ஜோசப், `கனா’, நெஞ்சுக்கு நீதி இயக்குநர் அருண்ராஜா காமராஜ், `போர் தொழில்’ இயக்குநர் விக்னேஷ் ராஜா, `கட்டா குஸ்தி’ இயக்குநர் செல்லா அய்யாவு, `டாடா’, `கராத்தே பாபு’ இயக்குநர் கணேஷ் பாபு ஆகிய 10 இயக்குநர்களின் படங்கள் அடுத்தடுத்து வரிசை கட்டி நிற்கின்றன.

இந்நிலையில் நடிகர் விஷ்ணு விஷால் தயாரிப்பில் அவரது தம்பி ருத்ரா கதாநாயகனாக அறிமுகமாகும் ‘ஓஹோ எந்தன் பேபி’ படத்தின் ட்ரெய்லர் வெளியிட்டு விழாவில் பேசியிருக்கும் ஐசரி கணேஷ், “எங்களின் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நெஷனல் தயாரிப்பில் வரவிருக்கும் 10 படங்களின் இயக்குநர்கள் பட்டியலை வெளியிட்டிருந்தோம்.

அதில் விஷ்ணு விஷாலின் தயாரிப்பு நிறுவனத்தோடு இணைந்து 3 படம் தயாரிக்கவிருக்கிறோம். ‘பேச்சுலர்’ சத்தீஸ் படம், அருண்ராஜா காமராஜ் படம் மற்றும் செல்லா அய்யாவுவின் ‘கட்டா குஸ்தி 2’ ஆகிய மூன்று படங்களை விஷ்ணு விஷாலோடு இணைந்து தயாரிக்கிறோம்.” என்று கூறியிருக்கிறார்.

ருத்ரா, விஷ்ணு விஷால்

இந்த ‘ஓஹோ எந்தன் பேபி’ படத்தின் ட்ரெய்லர் வெளியிட்டு விழாவில் வெற்றிமாறன், நடிகர் கார்த்தி உள்ளிட்டோரும் கலந்து கொண்டு விஷ்ணு விஷாலின் தம்பி ருத்ராவிற்கு வாழ்த்துத் தெரிவித்துப் பேசியிருக்கின்றனர்.

ருத்ரா, சினிமாவில் கதாநாயகனாகும் கனவுடன் விஷ்ணு விஷால் தயாரித்த ‘FIR, கட்ட குஸ்தி’ படத்தில் தயாரிப்பிற்கான நிர்வாகப் பணிகளைப் பார்த்துக் கொண்டார். இதையடுத்துத் தற்போது விஷ்ணு விஷாலின் தயரிப்பில் மணிரத்னத்திடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த கிருஷ்ணகுமார் இயக்கத்தில் ‘ஓஹோ எந்தன் பேபி’ படத்தில் நடித்திருக்கிறார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *