ஶ்ரீகணேஷ் இயக்கத்தில் சித்தார்த், சரத்குமார், தேவயானி, யோகி பாபு, மீத்தா ரகுநாத், சைத்ரா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘3BHK’.
இப்படம் வரும் ஜூலை 4ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. அருண் விஷ்வா இப்படத்தைத் தயாரித்திருக்கிறார். இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று( ஜூன் 26) சென்னையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் மாரிசெல்வராஜ் கலந்துகொண்டார். அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய மாரி செல்வராஜிடம் சிறிய பட்ஜெட் படங்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது.
அதற்குப் பதிலளித்த அவர், “ சிறிய பட்ஜெட் படம், பெரிய பட்ஜெட் படம் என்றெல்லாம் ஒன்றும் இல்லை. நல்ல படங்கள், மக்களை கனெக்ட் செய்யக் கூடிய படங்கள் நிச்சயம் வெற்றி பெறும். நல்ல சினிமாவை மக்கள் எடுத்துக்கொள்கிறார்கள். மக்களின் ரசனை எப்போதும் மேம்பட்டதாகத்தான் இருக்கும்” என்று கூறியிருக்கிறார்.

நடிகர்களின் போதைப்பொருள் தொடர்பாக கேள்வி எழுப்பியதற்கு, “போதைப் பொருட்களை யார் பயன்படுத்தினாலும் தவறுதான்” என்று பதிலளித்திருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…