• June 25, 2025
  • NewsEditor
  • 0

‘கல்லூரி விழா’

விஜய் கல்வி உதவித்தொகை வழங்கும் விழா என்ற பெயரில் ஜே.பி.ஆர் கல்லூரி சார்பில் ஒரு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிகழ்வில் தவெக சார்பில் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் மற்றும் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் கலந்துகொண்டனர்.

ஆதவ் அர்ஜுனா விஜய்யின் சுற்றுப்பயணத் திட்டத்தை உறுதி செய்து பேசியிருந்தார்.

TVK Vijay | விஜய்

‘விஜய்யின் சுற்றுப்பயணம்’

ஆதவ் அர்ஜுனா பேசியதாவது, “அவருடைய பெயரில் கல்வி உதவித்தொகை வழங்கப்படுவதில் விஜய் ரொம்பவே மகிழ்ச்சியடைந்தார்.

தவெக சார்பில் கல்வி விழா ஒன்றை நடத்தியிருந்தோம். அதில் ஐ.ஐ.டி-க்கு தேர்வான முதல் பழங்குடியின தமிழ்ப்பெண் ராஜேஷ்வரியை அழைத்துக் கௌரவித்திருந்தோம்.

இதுவே நாங்கள் எந்தத் திசையில் செல்கிறோம் என்பதைச் சொல்லிவிடும். உங்கள் கைக்கு அதிகாரம் வரும்போது ஒரு பேனா கிடைக்கும். அதை நியாயமாகப் பயன்படுத்துங்கள்.

கூடைப்பந்து சங்கத்தில் முதல்வரிடமிருந்து அழைப்பு வந்தால் கூட சிபாரிசை ஏற்றுக்கொள்ளமாட்டேன். அதனால்தான் இன்று இந்திய அணி மிகச்சிறப்பான நிலையில் இருக்கிறது.

ஆதவ் அர்ஜூனா
ஆதவ் அர்ஜூனா

தமிழகம் உயர்கல்வியில் சிறந்து விளங்குகிறது. ஆனால், படித்து வெளியே வருபவர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லை. இன்னும் ஒரே மாதத்தில் விஜய் தமிழ்நாடு முழுக்க வரப்போகிறார்.

ரிட்டையர் ஆகிவிட்டு ஒன்றும் இல்லாமல் சிலர் அரசியலுக்கு வருவார்கள். ஆனால், விஜய் 200-300 கோடி ரூபாய் சம்பளத்தை வேண்டாமென்று சொல்லிவிட்டு நம்பர் 1 இடத்தை வேண்டாமென்று சொல்லிவிட்டு அரசியலுக்கு வந்திருக்கிறார்” என ஆதவ் பேசியிருந்தார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *