• June 25, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி அடிக்கடி ரகசியமாக வெளிநாடு செல்வது ஏன் என்று பாஜக மூத்த தலைவர் அமித் மாளவியா கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து 'எக்ஸ்' வலைதளத்தில் அமித் மாளவியா வெளியிட்ட பதிவில், “ராகுல் காந்தி கடந்த வாரம் ரகசிய வெளிநாட்டு பயணத்தில் இருந்தார். இப்போது அவர் மீண்டும் வெளிநாடு சென்று, மற்றொரு வெளிப்படுத்தப்படாத இடத்துக்கு சென்றுள்ளார். அவர் இவ்வாறு அடிக்கடி ரகசியப் பயணம் செல்வது ஏன்? அடிக்கடி வெளிநாடு செல்வதற்கு அவரை கட்டாயப்படுத்துவது எது? எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் அவர் மக்களுக்கு பதில் அளிக்க கடமைப்பட்டுள்ளார்" என்று குறிப்பிட்டுள்ளார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *