
இஸ்ரேல் – ஈரான் தாக்குதல் நிறுத்தத்தின் பிரதிபலிப்பாக, சர்வதேச அளவில் தங்கம் விலை குறைந்துள்ளது. இதனால், இந்தியாவிலும் தங்கம் விலை குறைந்துள்ளது.
இன்னும் தங்கம் விலை குறையுமா என்பது கொஞ்சம் சந்தேகம்தான். காரணம், ஏப்ரல் மாதத்தில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உலக நாடுகளுக்கு விதித்த பரஸ்பர வரி, அடுத்த மாதம் அமலுக்கு வர உள்ளது.
இதை உலக சந்தைகள் எப்படி எடுத்துக்கொள்கிறதோ, அதைப் பொறுத்தே, தங்கம் விலையிலும் மாற்றம் இருக்கும்.
இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.85-உம், பவுனுக்கு ரூ.680-உம் குறைந்துள்ளது.
வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்துள்ளது. நேற்று முன்தினமும் நேற்றும் சேர்த்து தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,280 குறைந்துள்ளது.

இன்று ஒரு கிராம் தங்கம் (22K) ரூ.9,070-க்கு விற்பனை ஆகி வருகிறது.

இன்று ஒரு பவுன் தங்கம் (22K) ரூ.72,560-க்கு விற்பனை ஆகி வருகிறது.

இன்றைய வெள்ளி விலை ஒரு கிராமுக்கு ரூ.119 ஆகும்.