• June 21, 2025
  • NewsEditor
  • 0

சென்னையில் உள்ள வொர்க்ஃப்ரீக்ஸ் பிசினஸ் ஸ்கூல் மலேசியாவில் உள்ள புகழ் பெற்ற சிட்டி யுனிவர்சிட்டியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் முக்கிய அம்சமாக வொர்க்ஃப்ரீக்ஸ் பிசினஸ் ஸ்கூலில் MBA/MCA படிக்கும் மாணவர்களுக்கு சிட்டி யூனிவர்சிட்டி மலேசியாவின் சர்வதேச மேலாண்மை படிப்பிற்கான சான்றிதழ் வழங்க ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த மதிப்புமிக்க சர்வதேச மேலாண்மை படிப்பிற்கான சான்றிதழ்,உலகளாவிய வேலை வாய்ப்புக்கான சந்தையில் சாதிக்கத் துடிக்கும் மாணவர்களுக்கு மிகப்பெரிய வேலைவாய்ப்பை பெற்றுத்தரும் என்பதில் ஐயமில்லை.

வொர்க்ஃப்ரீக்ஸ்

இந்த சர்வதேச சான்றிதழ் மேலாண்மை திட்டம் வகுப்பறை கற்றலை தாண்டி மாணவர்களுக்கு சர்வதேச நிறுவனங்களில் பணியாற்றுவதற்கான திறன்களை பெரும் வகையில் பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சான்றிதழ் வணிக நிர்வாக அனுபவம், சர்வதேச அங்கீகாரம் மற்றும் முன்னணி பன்னாட்டு நிறுவனங்களுடன் தொழில் வாய்ப்புகளைப் பெற்றுத் தரும் நுழைவாயிலாக இருப்பது சிறப்பு அம்சமாகும்.

வொர்க்ஃப்ரீக்ஸ் வேளாண்மை கல்வி நிறுவனத்தின் முக்கிய அம்சங்கள்

சிறந்த இந்திய பல்கலைக்கழகத்திலிருந்து UGC-அங்கீகரிக்கப்பட்ட MBA/MCA பட்டம் வழங்கப்படுகிறது.

மலேசியாவின் சிட்டி பல்கலைக்கழகத்திலிருந்து சர்வதேச வணிக மேலாண்மை உலகளாவிய சான்றிதழ் படிப்பு வழங்கப்படுகிறது.

படிக்கும் போது வேலை வாய்ப்பு வழங்கப்படுவதால் மாணவர்கள் தொழில் அனுபவங்களை பெற்று விடுகிறார்கள்.

படிக்கும்போதே வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு மாதாந்திர உதவித் தொகையும் வழங்கப்படுகிறது. படிக்கும்போதே நிறுவனங்களில் நேரடியாக பணியாற்றி வணிக அனுபவங்களை பெறுவதால் மாணவர்களுக்கு சிறப்பான எதிர்காலம் அமைந்து விடுகிறது.

வணிகத்தில் இல்லாமல் நீங்கள் வணிகத்தில் தேர்ச்சி பெற முடியாது என்று வொர்க்ஃப்ரீக்ஸ் மேலாண்மை கல்வி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திரு. சையத் கூறுகிறார். “எங்கள் மாணவர்கள் மேலாண்மையை மட்டும் படிப்பதில்லை – அவர்கள் அதை ஒவ்வொரு நாளும் பயிற்சி செய்கிறார்கள். இந்த திட்டம் புதுமையானது மட்டுமல்ல, தனித்துவமானது மட்டுமல்ல, தொழில் நிறுவனங்கள் எதிர்பார்க்கும் திட்டமாக உள்ளது. மாணவர்களின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய திட்டமாக அமைந்துள்ளது என்கிறார்.

படிப்புடன் கூடிய வேலை வாய்ப்பு மற்றும் சம்பளம் என்ற அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட Work-Integrated MBA/MCA படிப்பு மாணவர்களுக்கு தொழில்முறை அனுபவத்துடன் கூடிய
உயர்கல்வியை பெறக்கூடிய அரிய வாய்ப்பை வழங்குகிறது. மாணவர்கள் தங்கள் பட்டப்படிப்பைத் தொடரும்போது நேரடியான வணிகச் சூழல்களில் நுழையும் போது நிறுவனங்கள் எதிர்பார்க்கும் திறன்கள் மேம்படுத்தி தலைமைப் பண்பு பண்புகளைக் கொண்ட ஆளுமை மிக்க மாணவர்களை வொர்க்ஃப்ரீக்ஸ் மேலாண்மை கல்வி நிறுவனம் உருவாகிறது.

நீங்கள் ஒரு புதிய பட்டதாரியாக இருந்தாலும் சரி, தொழில் நிறுவனங்களில் ஆரம்ப கட்டங்களில் வாய்ப்புகளைப் பெற்றவர்களாக இருந்தாலும் சரி, அல்லது ஆர்வமுள்ள தொழில்முனைவோராக இருந்தாலும் சரி, இந்த படிப்பு எதிர்காலத்திற்கு ஏற்ற, உலகளாவிய போட்டியில் சாதிக்க மாணவர்களுக்கான சிறப்பான வாய்ப்புகளைப் பெற்றுத் தரும் நுழைவாயிலாக அமைந்துள்ளது.

விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
* இளநிலை பட்டம் பெற்ற புதிய பட்டதாரிகள்
* திறமையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட பணிபுரியும் தொழில் வல்லுநர்கள்
* நடைமுறை வணிகத்தில் சாதிக்கத் துடிக்கும் இளைஞர்கள் மற்றும் வணிக அனுபவத்தைத் தேடும் ஆர்வமுள்ள தொழில்முனைவோர்கள்.

மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. நீங்கள் பணிபுரியும் போது மேலாண்மை படிப்பை படித்துக் கொண்டே திறமையை மேம்படுத்தி, உங்கள் வாழ்க்கையில் சர்வதேச அளவில் சாதிக்க வொர்க்ஃப்ரீக்ஸ் மேலாண்மை கல்வி நிறுவனத்தை  தொடர்பு கொள்ளவும்.

+91-9791177766

hi@workfreaksbschool.com

www.workfreaksbschool.com

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *