• June 17, 2025
  • NewsEditor
  • 0

விகடன் வாசகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி!

`மை விகடன்’ என்னும் களம் மூலம் வாசகர்கள் தொடர்ந்து தங்கள் எழுத்து திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர். கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட பயணக் கட்டுரைப் போட்டியில் நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகள் பிரசுரிக்கப்பட்டன. அவற்றில் மிக சிறந்த கட்டுரைகளுக்கு பரிசுத் தொகை வழங்கப்பட்டது.

தற்போது மீண்டும் ஒரு அறிவிப்பு.. ஆனால் இம்முறை சற்று உணர்வுப்பூர்வமான தலைப்பு : `ஒரு கடிதம் எழுதினேன்’

ஆம், இம்முறை கடிதம் எழுத வேண்டும். அதுவும் உங்கள் பெற்றோருக்கு/பிள்ளைகளுக்கு!

உங்கள் அம்மாவிடமோ அப்பாவிடமோ, மகனிடமோ, மகளிடமோ, நீண்ட நாட்களாக சொல்ல நினைக்கும் விஷயமாக இருக்கலாம், பாராட்டாக இருக்கலாம், நன்றியாக இருக்கலாம், உறவை கொண்டாடும் கடிதமாக இருக்கலாம், ஏன் மன்னிப்பாகக் கூட இருக்கலாம்.

உங்கள் கட்டுரைகளை இன்று தொடங்கி வரும் 26 ஆம் (26/06/2025) வரை அனுப்பலாம். கடிதம் 600-800 வார்த்தைகளுக்கும் இருக்க வேண்டும். உங்களின் சொந்த படைப்பாக இருக்க வேண்டும். உங்களது கடிதத்தை my@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

ஆசிரியர் குழுவால் தேர்வு செய்யப்படும் சிறந்த கடிதங்களுக்கு ஒரு அழகானப் பரிசு காத்திருக்கிறது.

பறந்து போ

இயக்குநர் ராம் இயக்கத்தில் வெளிவர இருக்கும் ‘பறந்து போ’ திரைப்படத்தின் ப்ரீமியர் காட்சியை, இயக்குநர் ராம் மற்றும் படக்குழுவுடன் இணைந்து பார்க்கலாம். ‘பறந்து போ’ திரைப்படத்தின் ப்ரீமியர் காட்சி சென்னையில் திரையிடப்பட உள்ளது. வெளியூர் அல்லது வெளிநாட்டில் இருக்கும் வாசகர்களின் கடிதங்கள் தேர்வு செய்யப்படும் பட்சத்தில் அவர்கள் சார்பாக சென்னையில் இருக்கும் நண்பர்களையோ, உறவினர்களையோ அனுப்பலாம். இயக்குநர் ராம் படம் என்றாலே உறவுகளின் ஆழம், யதார்த்தம் அற்புதமாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். `பறந்து போ’ திரைப்படமும் இதற்கு விதிவிலக்கல்ல.

நினைவில் கொள்க:

நீங்க கட்டுரையை அனுப்ப வேண்டிய கடைசி நாள் ஜூன் 26, 2025

ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கட்டுரைகளை (கடிதங்கள்) அனுப்பலாம்.

உங்கள் படைப்புகளை: my@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்

விகடனுக்கு என்று பிரத்யேகமாக அனுப்பப்படும் கட்டுரைகள் மட்டுமே பரிசீலிக்கப்படும்

உங்கள் படைப்பை திருத்தவோ, பிரசுரிக்கவோ, நிராகரிக்கவோ முழு உரிமையும் விகடனுக்கு இருக்கிறது.

கட்டுரையின் தரத்தின் அடிப்படையில் வெற்றியாளர்கள் விகடன் நடுவர் குழுவால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

my vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *