• June 13, 2025
  • NewsEditor
  • 0

அந்தவகையில் 2024-ம் ஆண்டிற்கான ஆனந்த விகடன் சினிமா விருதுகள் இன்று( ஜூன் 13) சென்னை டிரேட் சென்டரில் நடைபெற்று வருகிறது. இந்த ஆனந்த விகடன் சினிமா விருதுகள் விழாவில் சிறந்த குணசித்திர நடிகைக்கான விருதை லப்பர் பந்து படத்திற்காக ஸ்வாஸ்விகா பெற்றார். அவருக்கு இந்த விருதினை நடிகை ராதிகா மற்றும் RJ பரத் வழங்கினார்கள்.

ஆனந்த விகடன் சினிமா விருது விழாவில்

விருதை பெற்ற ஸ்வாஸ்விகா பேசுகையில், “சந்தோஷமாக இருக்கிறது. விகடன் அட்டைப்படத்தில் வர வேண்டும் என்பது எல்லோருக்கும் ஆசை. இப்போது இந்த விகடன் விருது வாங்கியது மகிழ்ச்சியாக இருக்கிறது. `லப்பர் பந்து’ எல்லோருக்கும் பொருத்திப் பார்ப்பதுபோல் இருந்தது.

`லப்பர் பந்து’ படத்தின் மூலம் இயக்குநர் தமிழரசு பச்சமுத்து எனக்குப் புதிய வாழ்க்கையைக் கொடுத்திருக்கிறார். இந்தப் படத்துக்குப் பிறகு நிறைய வாய்ப்புகள் கிடைத்திருக்கின்றன.

ஆனந்த விகடன் சினிமா விருது விழாவில்
ஆனந்த விகடன் சினிமா விருது விழாவில்

என்னுடைய கரியரில் ஏற்ற, இறக்கங்களில் துணையாக இருந்த என் அம்மாவுக்கு இந்த விருதைச் சமர்ப்பிக்கிறேன். ராதிகா மேம் கையால் விருது பெற்றதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி” என்றார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *