• June 13, 2025
  • NewsEditor
  • 0

விமான விபத்து நடந்த அன்று காலையிலேயே MidDay என்ற பத்திரிகையின் முன்பக்கத்தில் KidZania எனும் விளம்பரத்தில் Air India விமானம் ஒரு கட்டிடத்திற்குள் புகுந்து வெளியே வருவது போன்ற புகைப்படம் இடம் பெற்று இருந்தது, தற்போது அது வைரலாகி வருகிறது.

குஜராத் மாநிலம், அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து 242 பேருடன் லண்டனுக்கு சென்ற ஏா் இந்தியா விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளானது.

அகமதாபாத் விமான விபத்து

இந்த விபத்தில் விமான பணியாளர்கள், பயணிகள் என 241 பேர் பலியாகினர். ஒருவர் மட்டும் எமர்ஜென்சி எக்சிட் வழியாக உயிர் தப்பினார்.

அந்த விமானம் மருத்துவக் கல்லூரி விடுதி கட்டடத்தின் மீது விழுந்ததால் மருத்துவ மாணவர்கள் 10 பேர் பலியாகினர்.

ஏர் இந்தியா விமான விபத்துக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு , ஜூன் 12 அன்று மிட்-டே செய்தித்தாளில் முதல் பக்க விளம்பரத்தில் ஏர் இந்தியா விமானம் இடம்பெற்றிருந்தது.

அந்த விளம்பரத்தில் இருக்கும் கார்ட்டூனில் ஏர் இந்தியா விமானம் ஒரு கட்டிடத்திற்குள் மோதி வெளியே வருவது போன்ற காட்சி இடம்பெற்றிருந்தது.

இந்த புகைப்படம் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. மிட்-டே செய்தித்தாளில் வெளியான இந்த விளம்பரம், குழந்தைகளுக்கான தீம் பார்க்கை விளம்பரப்படுத்துவதற்காக வெளியிடப்பட்டதாகக் கூறப்படுகிறது.

ஆனால், இந்த விளம்பரத்தில் ஏர் இந்தியா விமானம் ஒரு கட்டிடத்திற்குள் புகுந்து வெளியே வருவது போன்ற அனிமேஷன் காட்சி ஏன் இடம்பெற்றிருக்கிறது என நெட்டிசன்கள் உள்பட பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *