• June 10, 2025
  • NewsEditor
  • 0

யூ டியூபில் வீடீயோக்கள் போட்டு பிரபலமானவர் ஶ்ரீராம் தண்டபாணி. பாண்டிச்சேரியைச் சேர்ந்த ஶ்ரீராமின் சேனல் பெயரைச் சொன்னால் ‘அட இவரா’ எனக் கேட்பீர்கள். இவரது சேனல் பெயர் ‘மைக்செட்’

ஆம், தற்போது ஓரிரு படங்களிலும் நடித்து வருகிற’ மைக்செட்’ ஶ்ரீராம் கடந்த வியாழக்கிழமை பாண்டிச்சேரியில் தனது அக்கா மகளைக் கரம்  பிடித்துள்ளார்.

‘என்ன சொல்லாமக் கொள்ளாம? திடீர் திருமணமா’ என ஶ்ரீராமையே தொடர்பு கொண்டு கேட்டோம்.

மைக்செட் ஶ்ரீராம் – ராசிகா

“முன்னாடி லவ் அது இதுன்னு வேற யாரையோ சொன்னானே”

”திடீர் திருமணமெல்லாம் இல்லைங்க. ஒரு மாசத்துக்கு முன்னாடியே நிச்சயதார்த்தம் நடந்திச்சு. என்னுடைய சர்கிள்ல கம்மியான எண்ணிக்கையிலதான் அழைப்பு விடுத்திருந்தேன். `ராசிகா’ என்னுடைய அக்கா பொண்ணு. அக்கா பொண்ணுங்கிறதால அந்தக் காலத்துல சொந்தம் விடுபட்டுடக்  கூடாதுன்னு வலுக்கட்டாயமாப் பிடிச்சு பண்ணி வைப்பாங்களே அந்த மாதிரியான கல்யாணம்னு  நினைச்சிடாதிங்க.

நான் லவ் பண்ணிதான் கல்யாணம் செய்திருக்கேன். முன்னாடி லவ் அது இதுன்னு வேற யாரையோ சொன்னானே, இப்ப புதுசா ஒரு லவ் பத்திச் சொல்றானானு நீங்க குழம்பத் தேவையில்லை.

மைக்செட் ஶ்ரீராம்-ராசிகா

ஸ்கூல் படிக்கிறப்ப வர்றதுக்குப் பெயரெல்லாம் காதலா? முன்னாடி சொன்னதெல்லாம் அந்த டைப்தான்.

ராசிகாவுடன் லவ் ஸ்டார்ட் பண்ணினப்பதான் ‘இது வழக்கமான காதல் இல்லங்கிற ஒரு ஃபீல் தெரிஞ்சது. அதாவது முன் ஜென்மத்துலயே ஏதோவொரு தொடர்பு இருந்த மாதிரியான ஒரு ஃபீலிங்கை உணர முடிஞ்சது.

அவளுக்கும் எங்கிட்டப் பேசறப்ப அதே ஃபிலிங் உணர முடிஞ்சிருக்கு.

தவிர அக்கா பொண்ணுங்கிற ஒரு ரத்த சொந்தமும் இந்த ஜென்மத்துலயே இருந்ததா, அதனால காதலுக்கு எதிர்ப்புங்கிற பேச்சுக்கே இடமில்லாமப் போயிடுச்சு. எதிர்ப்பு இருந்தா கொஞ்சம் த்ரில்லிங்கா இருந்திருக்குமோனு தோணுது.

ரெண்டு பேரும் கல்யாணம் செய்துக்கலாம்னு நினைச்சாலும் பெரியவங்க சம்மதம் ரொம்ப முக்கியமில்லையா? அதுவும் சொந்த பந்தத்துக்குள்ளதான் நிறைய பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

மைக்செட் ஶ்ரீராம் – ராசிகா

நல்ல வேளையா அந்த மாதிரியான பிரச்னைகள் எங்க வீட்டுல வரலை. பெரியவங்க எங்க கல்யாணத்துக்கு உடனே சம்மதம் சொல்லிட்டாங்க.

பிறகென்ன, ‘,மாங்கல்யம் தந்துனானே’ன்னு நல்லபடியா எல்லாம் முடிஞ்சது’ என்கிறார்.

பிரபல யூ டியூபர்கள், புகழ் உள்ளிட்ட டிவி, சினிமா நட்சத்திரங்கள் பலரும் இந்தத் திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.  

வாழ்த்துகள் `ஶ்ரீராம் – ராசிகா’

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *