• June 9, 2025
  • NewsEditor
  • 0

மகாராஷ்டிரா மாநிலத்தின் தாதரைச் சேர்ந்த தம்பதியினர் ‘வாவ் மோமோஸ்’ கடையிலிருந்து ‘ஸ்டீம் டார்ஜிலிங் மோமோ காம்போ’வை ஆர்டர் செய்திருக்கின்றனர்.

சைவ சிற்றுண்டியை ஆர்டர் செய்த அவர்களுக்கு சிக்கன் மோமோஸ் ஆர்டர் செய்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், தம்பதி, நுகர்வோர் நீதிமன்றத்தில், “சைவ உணவு உண்ணும் பாரம்பர்யமிக்க குடும்பத்தைச் சேர்ந்த எங்களுக்கு அசைவ உணவு வழங்கப்பட்டிருக்கிறது.

அதனால், எங்களின் மத உணர்வு புண்பட்டது. எனவே, எங்களுக்கு உரிய நஷ்டஈடு வழங்கப்பட வேண்டும்” எனக் குறிப்பிட்டிருக்கின்றனர்.

வாவ் மோமோஸ்

இந்த வழக்குக்குப் பதில் மனுத்தாக்கல் செய்த வாவ் மோமோஸ் நிறுவனம், “சைவம் – அசைவம் என இரண்டும் இருக்கும் காம்போவைத்தான் தம்பதியினர் தேர்வு செய்திருந்தார்கள்.

எங்களின் தவறுகள் சுட்டிக்காட்டப்பட்டதும், அவர்களின் பணம் திரும்பிக் கொடுக்கப்பட்டது” எனக் குறிப்பிட்டிருக்கிறது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட மும்பை நுகர்வோர் நீதிமன்றம், “புகார்தாரர்கள் கண்டிப்பாக சைவ உணவு உண்பவர்களாகவும், அசைவ உணவு அவர்களின் மத உணர்வுகளைப் புண்படுத்துவதாகவும் இருந்தால், சைவ உணவுக்கென இருக்கும் உணவகத்திலிருந்து உணவை ஆர்டர் செய்வதற்குப் பதிலாக அசைவ மற்றும் சைவ உணவுகளை வழங்கும் உணவகத்திலிருந்து ஏன் ஆர்டர் செய்ய வேண்டும்?

மேலும், புகார்தாரர்கள் சைவ மோமோக்களை ஆர்டர் செய்ததற்கான ஆதாரத்தை வழங்கத் தவறிவிட்டனர். எனவே இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது” எனத் தீர்ப்பளித்தது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *