• June 9, 2025
  • NewsEditor
  • 0

நேற்று (ஜூன் 8) மதுரை ஒத்தக்கடை பகுதியில் வேலம்மாள் குளோபல் மருத்துவமனை மைதானத்தில் தமிழக பாஜக மாநில, மாவட்ட, மண்டல நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா,  “முருகன் மாநாடு வரும் ஜூன் 22ஆம் தேதி நடைபெறுகிறது. அந்த மாநாட்டை வெற்றிகரமானதாக மாற்ற நீங்கள் உதவ வேண்டும். இந்த கூட்டம் மாற்றத்தை உண்டாக்கும். திமுக ஆட்சியை வீட்டிற்கு அனுப்பும்.

1000 ஆண்டுகள் பழைமையான முருகன் கோயிலை சிக்கந்தர் மலை என கூறுவதற்கு திமுக அரசுக்கு துணிச்சல் வந்துள்ளது. வரும் ஜூன் 22ஆம் தேதி நடைபெறும் முருகன் மாநாட்டில் கலந்து கொண்டு நமது வலிமையை காட்ட வேண்டும்” என்றும் “டெல்லி, மகாராஷ்டிராவை போல் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழகத்திலும் வெற்றி பெறுவோம்” என்று பேசியிருந்தார்.

அமித்ஷா

தமிழ் கடவுள் முருகனும் ஏமாற மாட்டார்

இதுகுறித்துப் பேசியிருக்கும் விசிக தலைவர் தொல்.திருமாவளவன், “முருகன் பெயரிலான பாஜக மாநாட்டால் தமிழக மக்கள் ஏமாற மாட்டார்கள், தமிழ் கடவுள் முருகனும் ஏமாற மாட்டார். உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் ராமர் வடிவம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் துர்கா தேவி, மத்திய இந்தியாவில் விநாயகர் அவதாரம், தமிழ்நாட்டில் முருகன் அவதாரத்தை எடுத்துள்ளனர். பாஜக செய்யும் இந்த மதவெறி அரசியல் தமிழ்நாட்டில் எடுபடாது” என்று பேசியிருக்கிறார்.

தமிழ்நாடு முற்றிலும் மாறுபட்ட பூமி

2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெறும் என்ற அமித் ஷாவின் பேச்சுக்கு, “தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் வரும் என்பது அமித் ஷாவின் கனவாக இருக்கலாம் டெல்லியில் விளையாடியதுபோல் தமிழ்நாட்டில் விளையாட முடியாது; டெல்லி வேறு. தமிழ்நாடு வேறு; தமிழ்நாடு முற்றிலும் மாறுபட்ட பூமி” என்று கூறியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *