• June 8, 2025
  • NewsEditor
  • 0

மதுரை: “தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமித்ஷாவால் திமுகவை தோற்கடிக்க முடியாது என்று கூறுகிறார். அவருக்கு ஒன்றைச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். என்னால் தோற்கடிக்க முடியாமல் இருக்கலாம், ஆனால் தமிழக மக்கள் திமுகவை தோற்கடிக்க காத்திருக்கிறார்கள்” என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியுள்ளார்.

மதுரை ஒத்தக்கடையில் பாஜக மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் இன்று (ஜூன் 8) நடைபெற்றது. இக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: "தமிழகத்துக்கு வந்து தமிழ் மொழியில் பேசமுடியவில்லை என்பதற்காக நான் வருந்துகிறேன். 3000 ஆண்டு வரலாற்றுப் பெருமை கொண்ட பழமை வாய்ந்த நகரம் மதுரை. வரும் ஜூன் 22ம் தேதி மதுரையில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டை சிறப்பாக நடத்தி தர வேண்டும், என்று உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *