• June 8, 2025
  • NewsEditor
  • 0

மலையாள திரையுலகில் பிரபலமான நடிகர் ஷைன் டாம் சாக்கோ. சமீபத்தில்கூட அஜித்தின் ‘Good Bad Ugly’ திரைப்படத்தில் சிறு கதாபாத்திரல் நடித்து கவனம் ஈர்த்திருந்தார். மலையாளம், தமிழ் என இரண்டு திரையுலகிலும் தற்போது கவனம் ஈர்த்து வரும் நடிகர் டாம் சாக்கோ, சமீபத்தில் போதைப் பொருள் பயன்படுத்தியது தொடர்பான புகாரில் சிக்கினார். அந்த செய்தியின் மூலம் மலையாள திரையுலகில் போதைப் பொருள் பயன்பாடு குறித்த அதிர்ச்சிகர செய்திகள் வெளியானது.

கார் விபத்து

இதற்கிடையில், உடல்நலமில்லாமல் ஷைன் டாம் சாக்கோ சிகிச்சைப் பெற்றுவந்ததாகக் கூறப்படுகிறது. கடந்த ஜூன் 6ம் தேதி இரவு 10 மணியளவில் அவரது குடும்பத்தினருடன் மருத்துவ சிகிச்சைக்காக எர்ணாகுளத்திலிருந்து பெங்களூருக்கு காரில் பயணித்துக் கொண்டிருந்தார். முதற்கட்டத் தகவலின்படி கார் சேலம் அருகே காலை 6 மணியளவில் சென்றுகொண்டிருக்கும்போது, எதிர்புறத்தில் வந்த லாரி ஒன்று காரில் மோதியிருக்கிறது.

இந்த விபத்தில் காரின் பின்புறம் அமர்ந்திருந்த ஷைன் டாம் சாக்கோவின் தந்தை சி.பி. சாக்கோ பலத்த காயமடைந்து மருத்துவமனை சிகிச்சையில் உயிரிழந்தார். டாம் சாக்கோ காயங்களுடன் தர்மபுரி அரசு மருத்துவமனையில் முதற்கட்ட சிகிச்சை எடுத்துவிட்டு, இப்போது கேரளா திருச்சூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

நடிகர் ஆசிஃப் அலி

இந்நிலையில் திரையுலகினர் பலரும் ஷைன் டாம் சாக்கோவிற்கும், அவரது குடும்பத்திற்கும் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். மலையாளத்தில் வெளியாகி கவனம் ஈர்த்த ‘கிஷ்கிந்தா காண்டம்’ படத்தின் நடிகரும், டாம் சாக்கோவின் நண்பருமான ஆசிஃப் அலி, “ஷைன் டாம் சாக்கோ குடும்பத்திற்கு நடந்த விபத்தும், அவரது தந்தையின் மரணமும் எங்களை சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. டாம் சாக்கோவின் செயல்பாடுகளை நண்பனாக பலமுறை நான் கண்டித்திருக்கிறேன்.

அவர் மீது கோபப்பட்டிருக்கிறேன். அவருக்குப் பலமுறை அறிவுரையும் சொல்லியிருக்கிறேன். ஆனால் இப்போது நாம் எல்லோரும் டாம் சாக்கோ மற்றும் அவரது குடும்பத்திற்கு ஆதரவாக நிற்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.

சுரேஷ் கோபி

பாஜக கட்சியின் மத்திய அமைச்சரும், பிரபல நடிகருமான சுரேஷ் கோபி, டாம் சாக்கோவை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து, “அவரது தந்தையின் இறுதிச் சடங்குகள் முடிந்ததும் ஷைனுக்கு அறுவை சிகிச்சை செய்யப்படும் என்று மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள். கட்டுப்பாட்டை இழந்த லாரி பின்புறமாக மோதியதால் காரின் பின் புறம் அமர்ந்திருந்த டாம் சாக்கோ, அவரது தந்தை பலத்தக் காயமடைந்திருக்கின்றனர். தந்தை பரிதபமாக உயிரிழந்துவிட்டார். இன்று மாலை வெளிநாட்டில் இருக்கும் டாம் சாக்கோவின் சகோதரி வந்ததும் அவரது தந்தையின் இறுதிச் சடங்குகள் நடைபெறும்” என்று கூறியிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *