• June 4, 2025
  • NewsEditor
  • 0

சூப்பர்ஹீரோ உலகில் முன்னணி நிறுவனங்களாகவும் பல தசாப்தங்களாக போட்டி நிறுவனங்களாகவும் வலம் வருபவைதான் மார்வெல் ஸ்டுடியோஸ் (MARVEL STUDIOS) மற்றும் டிசி ஸ்டுடியோஸ்(DC STUDIOS) .

சூப்பர்ஹீரோ காமிக் புத்தகங்கள் வெளியிடுவதில் தொடங்கிய இந்த இரு நிறுவனங்களும் பல வெற்றிப் படங்கள் கொடுத்து இருந்தாலும் இன்றளவும் பல புதிய காமிக் புத்தகங்கள் வெளியிட்டு வருகின்றனர்.

எனவே இவர்களுக்கு இடையேயான போட்டி காமிக் உலகிலும் வலுவாகத்தான் இருந்து வருகிறது.

SUPERMAN VS THE AMAZING SPIDER MAN Comic

1976-ம் ஆண்டு முதல் முறை இந்த இரு நிறுவனங்களும் தங்கள் முதல் க்ராஸ் ஓவர் காமிக்ஸை வெளியிட்டனர். சூப்பர்மேன் vs தி அமேசிங் ஸ்பைடர் மேன் (SUPERMAN VS THE AMAZING SPIDER MAN) என்ற காமிக்ஸ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

2003-ம் ஆண்டு ஜெ.எல்.ஏ/தி அவெஞ்சர்ஸ் (JLA/THE AVENGERS) என்று டிசியின் ஜஸ்டிஸ் லீக் மற்றும் மார்வெல்லின் அவெஞ்சர்ஸ் குழுவை இணைத்து வெளிவந்த க்ராஸ் ஓவர்தான் கடைசியாக இருவரும் இணைந்து வெளியிட்ட காமிக்ஸ்.

கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்குப் பிறகு இரு நிறுவனங்களும் இந்த காமிக்கிற்கு இணைகின்றனர்.

இதில் மார்வெல் காமிக்ஸ் தரப்பில் எழுத்தாளர்கள் செப் வெல்ஸ்(ZEB WELLS) மற்றும் க்ரெக் கேப்புலோ (GREG CAPULLO) , டிசி தரப்பில் க்ராண்ட் மோரிசன்(GRANT MORRISON) மற்றும் டேன் மோரா (DAN MORA) இணைந்துள்ளனர்.

DC & Marvel
DC & Marvel

இந்த காமிக்ஸின் முதல் வெளியீடு வரும் செப்டம்பர் மாதம் 17-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு காமிக் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *