• June 3, 2025
  • NewsEditor
  • 0

‘தக் லைஃப்' இசை வெளி​யீட்டு விழா​வில் பேசிய நடிகரும் மக்​கள் நீதி மய்​யத்​தின் தலை​வரு​மான கமல்​ஹாசன், ‘‘தமிழில் இருந்து கன்​னடம் பிறந்​தது” என குறிப்​பிட்​டார். இதற்கு கன்னட அமைப்​பினர் கடும் எதிர்ப்பு தெரி​வித்து அவருக்கு எதி​ராகப் போராட்​டங்​களில் குதித்​துள்​ளனர். கர்​நாடக முதல்​வர் சித்​த​ராமை​யா, பாஜக மாநில தலை​வர் விஜயேந்​திரா உள்​ளிட்​டோரும் கண்​டனம் தெரி​வித்​தனர்.

இதையடுத்து கன்னட கலை மற்​றும் கலாச்​சா​ரத் துறை அமைச்​சர் சிவ​ராஜ் தங்​கடகி, ‘‘கமல்​ஹாசனின் கருத்​தால் கன்னட மக்​களின் மனம் புண்​பட்​டுள்​ளது. இதற்​காக அவர் மன்​னிப்பு கேட்​கா​விட்​டால் அவரின் படத்​தைக் கர்​நாட​கா​வில் தடை செய்​வோம்” எனத் தெரி​வித்​தார். ஆனால் கமல்​ஹாசன், ‘‘நான் எந்த தவறும் செய்​ய​வில்​லை. எனவே மன்​னிப்பு கேட்க மாட்​டேன்'' என பதிலளித்​தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *