• June 3, 2025
  • NewsEditor
  • 0

யிறு சுத்தமா இருக்கணும்னா, காலையில பல்லைத் தேய்ச்சவுடனே 2 சொம்பு தண்ணிக்குடிச்சா போதும்னு நினைச்சிட்டிருந்தோம். அதுகூடவே வாரத்தின் 7 நாள்களும் தினம் ஒரு ஜூஸ்னு 7 ஜூஸ்களை காலையில 9 மணிக்குள்ள குடிச்சா, அசிடிட்டியில ஆரம்பிச்சு உடல் எடையைக் குறைக்கிறது, ரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ராலைக் கட்டுக்குள் வைக்கிறதுன்னு நிறைய ஹெல்த் பெனிஃபிட்ஸ் கிடைக்கும்னு சொல்ற இயற்கை மருத்துவர் யோ.தீபா, அந்த 7 ஜூஸ்களை எப்படித் தயாரிக்கணும், அவற்றின் ஆரோக்கியப்பலன்கள் என்னன்னு இந்தக் கட்டுரையில விரிவா பேசியிருக்கார்.

முதல் நாள்: எலுமிச்சை ஜூஸ்

எலுமிச்சை ஜூஸ்

வெதுவெதுப்பான ஒரு டம்ளர் நீரில் பாதி எலுமிச்சையைப் பிழிந்து, அதில் 2 சிட்டிகை பிங்க் சால்ட் சேர்த்து, நன்கு கலந்து, காலையில் தண்ணீர் குடித்த சிறிது நேரம் கழித்து குடிக்கலாம்.

எலுமிச்சை ஜூஸின் பலன்கள்:

– உடலுக்குப் புத்துணர்வு தரும்.

– உடலில் உள்ள அனைத்து நச்சுகளையும் வெளியேற்ற உதவும்.

– எலுமிச்சையில் உள்ள வைட்டமின் C நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

– இமயமலை உப்பில் 80-க்கும் மேற்பட்ட தாதுக்கள் உள்ளதால், உடலுக்கு தேவையான பொட்டாசியம், அயோடின், மக்னீசியம், மாங்கனீசு போன்றவை கிடைக்கின்றன.

– எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்னைகளைத் தடுக்கும்.

– உடல் எடையைக் குறைக்க உதவும்.

– ரத்த அழுத்தம் உள்ளவர்கள் உப்புக்கு பதிலாக தேன் சேர்த்துக் கொள்ளலாம்.

இரண்டாவது நாள்: சுரைக்காய் ஜூஸ்

சுரைக்காய் ஜூஸ்
சுரைக்காய் ஜூஸ்

சுரைக்காயை தோல் சீவி அரைத்து, அதை ஜூஸாக்கி, சிறிது மிளகு, சீரகம் மற்றும் சுவைக்கு உப்பு சேர்த்து குடிக்கலாம்.

சுரைக்காய் ஜூஸின் பலன்கள்:

– இதில் உள்ள தாதுக்கள் மற்றும் நார்ச்சத்து உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகளை வழங்குவதால், இது ஒரு சிறந்த நச்சு நீக்கி ஜூஸாகும்.

– ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் போன்ற பிரச்னைகளை கட்டுக்குள் வைக்கும்.

– காலையில் ஏப்பம், வயிறு குத்துதல் சரியாகும்.

மூன்றாவது நாள்: ABC ஜூஸ்

ABC ஜூஸ்
ABC JUICE

நெல்லிக்காய், பீட்ரூட், கேரட் ஆகியவற்றை ஒன்றாக அரைத்து, சிறிது தேன் கலந்து குடிக்கலாம். இதில் ஆப்பிள் சேர்க்க தேவையில்லை.

ABC ஜூஸின் பலன்கள்:

– இதில் வைட்டமின் A, B, C சத்துக்கள் உள்ளன, இவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

– பெண்களுக்கு சரும ஆரோக்கியத்துக்கும், கூந்தல் ஆரோக்கியத்துக்கும் மிகவும் பயனுள்ளது.

நான்காவது நாள்: கொத்தமல்லி ஜூஸ்

கொத்தமல்லி ஜூஸ்
கொத்தமல்லி ஜூஸ்

தலா கைப்பிடி கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா இலை மற்றும் ஒரு பாதி நெல்லிக்காயை அரைத்து, சுவைக்காக மிளகு, உப்பு அல்லது தேன் சேர்த்துக் குடிக்கலாம்.

கொத்தமல்லி ஜூஸின் பலன்கள்:

– முடி உதிர்தலைத் தடுக்கும்.

– நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

– சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு பயனுள்ளது.

– இரும்புச்சத்து இருப்பதால், சிறுநீரகக் கல் மற்றும் உடல் பருமனைக் குறைக்க உதவும்.

ஐந்தாவது நாள்: மஞ்சள்-சுருள்பட்டை ஜூஸ்

மஞ்சள்-சுருள்பட்டை ஜூஸ்
மஞ்சள்-சுருள்பட்டை ஜூஸ்

ஒரு கப் தண்ணீரில் சிறிது சுருள்பட்டை, சிட்டிகை மஞ்சள், கால் டீஸ்பூன் சீரகம் மற்றும் ஓர் அன்னாசிப்பூவை இடித்து சேர்த்து, நன்கு கொதிக்க வைத்து, சிறிது எலுமிச்சைச்சாறு மற்றும் தேன் கலந்து குடிக்கலாம்.

மஞ்சள்-சுருள்பட்டை ஜூஸின் பலன்கள்:

– உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.

– எலும்புகளுக்கு வலுவைத் தரும்.

– நுரையீரலைச் சுத்தப்படுத்தும்.

– ஆஸ்துமா மற்றும் சளி தொந்தரவு உள்ளவர்களுக்கு உகந்தது.

ஆறாவது நாள்: காய்கறி ஜூஸ்

கேரட் ஜூஸ்
கேரட் ஜூஸ்

கேரட், பீட்ரூட், வெள்ளரி என ஏதேனும் ஒரு காய்கறியைத் தேர்ந்தெடுத்து ஜூஸாக்கி குடிக்கலாம்.

எல்லா காய்கறிகளிலும் உடலுக்கு தேவையான வைட்டமின்கள் உள்ளன, இவை உடலுக்கு ஊட்டச்சத்து அளிக்கும்.

ஏழாவது நாள்: கற்றாழை ஜூஸ்

கற்றாழை ஜூஸ்
கற்றாழை ஜூஸ்

கற்றாழையை தோல் சீவி, நன்கு கழுவி சுத்தம் செய்து, ஜூஸாக்கி, சிறிது பெருங்காயம், இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து, மோராக அடித்து குடிக்கலாம். நாட்டுச்சர்க்கரை, பனங்கற்கண்டு அல்லது தேங்காய்ப்பாலுடன் கலந்து குடித்தால், பாயாசம் குடிப்பது போல் இருக்கும்.

கற்றாழை ஜூஸின் பலன்கள்:

– அசிடிட்டி மற்றும் ஜீரணப் பிரச்னைகளைத் தடுக்கும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *