• June 1, 2025
  • NewsEditor
  • 0

எல்ஐசி நிறுவனம், பிரிட்டிஷ் தரநிலை நிறுவனத்திடமிருந்து ISO 22301:2019 வணிக தொடர்ச்சி மேலாண்மை அமைப்பு சான்றிதழைப் பெற்றுள்ளது.

முன்னணி பொதுத்துறை நிறுவனமான எல்ஐசியின் செயல்பாட்டு மீள்தன்மை, வணிக தொடர்ச்சி திட்டமிடல் மற்றும் இடர் மேலாண்மை திறன்கள் ஆகியவை உலகளாவிய சிறந்த நடைமுறைகளுடன் ஒத்துப்போகின்றன என்பதை அங்கீகரிக்கரித்து பிரிட்டிஷ் தரநிலை நிறுவனத்தால் (BSI) ISO 22301:2019 சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

LIC | எல்ஐசி

ISO 22301:2019 BCMS வணிக தொடர்ச்சி நடைமுறைகளைப் பின்பற்றுவதிலும், எதிர்பாராத இடையூறுகளின் போதும் தடையற்ற சேவைகளை உறுதி செய்வதிலும், மற்றும் ஆபத்தை திறம்பட நிர்வகிப்பதிலும் எல்ஐசியின் திறனை அங்கீகரிக்கிறது.

ISO 22301:2019 என்பது வணிக தொடர்ச்சி மேலாண்மைக்கான ஒரு சர்வதேச அளவுகோலாகும். செயல்பாட்டு இடையூறுகளைக் குறைப்பதிலும், நெருக்கடி காலங்களில் விரைவான மீட்சியை உறுதி செய்வதிலும் கவனம் செலுத்துகிறது இந்த சான்றிதழ் எதிர்பாராத சவால்கள் ஏற்பட்டாலும் வாடிக்கையாளர்களுக்குத் தடையின்றி சேலை சேவை செய்வதை உறுதி செய்வதற்கும் சேவைகளின் தொடர்ச்சியை உறுதி செய்வதற்குமான எல்ஐசியின் தொடர் செயல்பாட்டுக்கு கிடைத்த ஓர் அங்கீகாரம் ஆகும்

இத்தருணத்தில் உரையாற்றிய எல்ஐசியின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் மேலாண் இயக்குநர் திரு. சித்தார்த்த மொஹந்தி, “எல்ஐசியின் பயணத்தில் இது ஒரு மைல் கல் ஆகும் ஒரு நிறுவனமாக, எங்கள் வாடிக்கையாளர்கள் மற்றும் பிற பங்குதாரர்கள் எங்கள் மீது வைத்திருக்கும் அசைக்கமுடியாத நம்பிக்கைக்கான சான்றாகும் மதிப்புமிக்க ISO 22301:2019 சான்றிதழைப் பெறுவது, எந்தவொரு இடையூறு நிகழ்வுகளின் போதும் வணிக தொடர்ச்சியை உறுதி செய்வதற்கும், எங்கள் பங்குதாரர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கும், எல்ஐசி மீதான நம்பிக்கையை மேலும் வலுப்படுத்துவதில் எங்கள் உறுதிப்பாட்டிற்கு ஒரு சான்றாகும்.

“பாதுகாப்பு மற்றும் மீள்தன்மை எப்போதும் LIC-யின் செயல்பாட்டுத் தத்துவத்தின் மையமாக இருந்து வருகிறது” என்று எல்ஐசியின் நிர்வாக இயக்குநர் திரு தப்லேஷ் பாண்டே கூறினார் “ISO 22301 சான்றிதழைப் பெறுவது. பாதுகாப்பான, தடையற்ற சேவைகளை உறுதி செய்வதன் மூலமும், இடையூறுகளுக்கு எதிராக எங்கள் தயார்நிலையை தொடர்ந்து மேம்படுத்துவதன் மூலமும் கோடிக்கணக்கான எங்கள் பாலிசிதாரர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கான எங்கள் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை உறுதி செய்கிறது” என்றார்.

LIC | எல்ஐசி
LIC | எல்ஐசி

சிறந்த தலைமை எல்ஐசியின் நிறுவன இடர் மேலாண்மை சைபர் பாதுகாப்புத் துறை மற்றும் மூத்த தலைமைக் குழுக்களின் தொடர்ச்சியான ஆதரவு மற்றும் நிர்வாக மேற்பார்வை ஆகியவை நிறுவன அளவிலான வலுவான பங்கேற்பை உறுதி செய்தன எதிர்காலத்தில், BSI இன் தொடர் கண்காணிப்பின் கீழ் எல்ஐசி வழக்கமான பயிற்சிகள் மற்றும் மதிப்பாய்வுகளில் அவ்வப்போது ஈடுபடும் மேலும் அதன் வணிக தொடர்ச்சி மேலாண்மை நடைமுறைகளில் தொடர்ச்சியான முன்னேற்றத்தை உறுதி செய்யும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *