
பங்குச் சந்தையில் எப்போது வேண்டுமானாலும் எதுவும் நடக்கலாம். மேலும் ஒரு பங்கை ஒரு அனலிஸ்ட் வாங்கச் சொல்வார். அதே பங்கை இன்னொரு அனலிஸ்ட் விற்கச் சொல்வார்.
நியாயமான லாபம் இழப்பு..!
ஒட்டு மொத்த பங்குச் சந்தை ஏற்றத்தில் இருக்கும் போது அல்லது இறக்கத்தில் இருக்கும் போது ஒவ்வொரு அனலிஸ்ட்-ம் ஒரு கருத்தைச் சொல்வார்கள்.
மேலும் பங்குச் சந்தை சார்ந்த ஈக்விட்டி ஃபண்டுகளில் முதலீடு செய்து வரும் போது, சந்தையில் ஏற்படும் பரபரப்பான சூழலில் பலரும் யூனிட்களை விற்று விட்டு வெளியேறி விடுகிறார்கள்.
பலரும் எஸ்.ஐ.பி முதலீட்டை நிறுத்தி விடுகிறார்கள். இதனால், தங்களுக்குக் கிடைக்க வேண்டிய நியாயமான லாபத்தை இழக்கிறார்கள்.
இந்த நிலையில் முதலீட்டாளர்களுக்கு வழிகாட்ட நாணயம் விகடன் ஆன்லைன் நிகழ்ச்சியை நடத்துகிறது.
நாணயம் விகடன் நடத்தும் ‘பரபரப்பான பங்குச் சந்தையில் அமைதியான முதலீட்டு யுக்தி..!’ என்கிற ஆன்லைன் பயிற்சி வகுப்பு ஜூன் 21, 2025 (சனிக்கிழமை) நேரம்: 10.30 am to 12 pm நடக்கிறது.
இதில், நிதி ஆலோசகர் கா.ராமலிங்கம் (Holisticinvestment.in) சிறப்புரையாற்றுகிறார். இவர் நிதிச் சேவையில் 20 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். நாணயம் விகடன் இதழில் தொடர் எழுதியவர். தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வருகிறார்.

திசை திரும்புபவர்களிடம் எப்படி எச்சரிக்கையாக இருக்க வேண்டும், நிபுணர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் சொல்வதைக் கேட்க வேண்டுமா, அமைதியாக முதலீடு செய்ய என்ன செய்ய வேண்டும்?, பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், தங்கம், ரியல் எஸ்டேட் போக்கு எப்படி இருக்கும்?, முதலீட்டு லாபத்தைத் தக்க வைக்க என்ன செய்ய வேண்டும்? உள்ளிட்ட விஷயங்கள் கற்றுத்தரப்படுகின்றன.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY