
ஒவ்வொரு ஆண்டும் வருமான வரி கணக்குத் தாக்கல் செய்ய ஜூலை 31-ம் தேதியே கடைசி நாள். ஆனால், இந்த ஆண்டு (2025) கடைசி நாளை செப்டம்பர் 15-ம் தேதிக்கு மாற்றியுள்ளது மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT).
வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான PORTAL கடந்தாண்டு ஏப்.16ம் தேதியே திறக்கப்பட்டது. ஆனால் இந்தாண்டு மே.27 -ம் தேதி ஆகியும் E Filing PORTAL திறக்காததால் லட்சக்கணக்கானோர் குழப்பம் அடைந்துள்ளனர். வருமான வரி கணக்கு தாக்கல் படிவத்தில் பல மாற்றங்கள் செய்யப்படுவதால் தாமதம் ஏற்பட்டதாக கூறினர்.
இந்நிலையில், இதுகுறித்து CBDT வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்…
நீட்டிப்பிற்கு காரணம் என்ன?
2025-26 மதிப்பீட்டிற்கு ஆண்டுக்கான, புதிய ITR படிவங்கள் எளிமையாகவும், வெளிப்படையாகவும், துல்லியமாகவும் மாற்றப்பட்டுள்ளன.
இந்த மாற்றத்தால் வருமான வரி தாக்கல் செய்யப் பயன்படுத்தப்படும் அமைப்பு மற்றும் கருவிகளைப் புதுப்பிக்க கால அவகாசம் தேவைப்படுகிறது.
மேலும், 2025-ம் ஆண்டு மே 31-ம் தேதிக்குள் தெரிய வரும் TDS தகவல்கள், ஜூன் மாத ஆரம்பத்தில் தான் தெரியும். அதனால்,மக்களுக்கு ஜூலை 31-ம் தேதிக்குள் வருமான வரி கணக்குத் தாக்கல் செய்ய சிரமமாக இருக்கும். வருமான வரி கணக்குத் தாக்கல் செய்யும் கடைசி தேதி மாற்றப்பட்டுள்ளது. இந்தக் கால அவகாச நீட்டிப்பின் மூலம் மக்கள் எளிதாகவும், சரியாகவும் வருமான வரி கணக்குத் தாக்கல் செய்ய முடியும்”.