• May 27, 2025
  • NewsEditor
  • 0

குமுளி: நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, முல்லைப் பெரியாறு அணையில் ஒரே நாளில் 3 அடி அளவுக்கு நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

தென்மேற்குப் பருவமழை இந்த ஆண்டு வழக்கத்தை விட முன்னதாகவே தொடங்கி விட்டது. இதனால் கடந்த ஒரு வாரமாக தமிழக – கேரள எல்லையில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் அணைக்கான நீர் வரத்து பல மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த 23-ம் தேதி விநாடிக்கு 100 கன அடியாக இருந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து நேற்று (மே 26) 1,648 கனஅடியாக உயர்ந்தது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *