
நிகும்பலா ஹோமம்: எல்லாப் பிரச்னைகளுக்கும் தீர்வளிக்கும் அமாவாசை நள்ளிரவு வழிபாடு! சங்கல்பியுங்கள்! 24-6-2025 – நிகும்பலா ஹோமம் உக்கிரம் பெற பெற இந்த காளியின் திருமுகம் சிவந்து உக்கிரமாவதை இப்போதும் காணலாம் என்பது அதிசயம்.
முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 – 66802980/07
ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.
மகாகாளியின் அம்சமாக தீமைகளை அழிக்க உருவெடுத்தவள் நிகும்பலா தேவி. இவளை உபாசித்து வழிபட எதிரிகள் தொல்லையே இருக்காது என்பதே நிஜம். அமாவாசை நாளில் இரவில் மகாகாளிக்கும் நிகும்பலா தேவிக்கும் பிரத்யங்கிரா தேவிக்கும் மிக உக்கிரமாக மிளகாய் வற்றலைக் கொண்டு செய்யப்படும் ஹோமமே நிகும்பலா ஹோமம் எனப்படும். வெற்றிகளை அருள காளியும் துக்கங்களை அழிக்க பிரத்யங்கிரா தேவியும் எதிரிகளை ஒடுக்க நிகும்பலா தேவியும் இந்த ஹோமத்தில் வரவழைக்கப் படுகின்றனர் என்பது ஐதிகம். அமாவாசை, அஷ்டமி ஆகிய நாட்களில் வெகு சிறப்பாக இந்த நிகும்பலா ஹோமம் நடத்தப்படுகிறது.
ராமாயணத்தில் ஸ்ரீராமரை வெற்றி கொள்ள ராவணனின் மகன் இந்திரஜித் எட்டுத் திசைகளிலும் மயான பூமியை உருவாக்கி இந்த நிகும்பலா ஹோமம் நடத்தினான். எனினும் அவன் பக்கம் நியாயம் இல்லாததால் தேவி காளி ராமருக்கு வெற்றியைத் தேடி தந்தாள் என்கிறது ராமாயணம். தர்மம் கொண்டவர்களைக் காக்கும் அக்னி ரட்சையாக இந்த ஹோமம் விளங்குகிறது என்கின்றன புராணங்கள். மகாபாரதப் போரிலும் எதிரிகளை வெல்ல இந்த ஹோமம் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 – 66802980/07
ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.
சோழர்களின் பல வெற்றிகளுக்கு இந்த நிகும்பலா ஹோமம் பெருமளவு பயன்பட்டது என வரலாற்று ஆய்வுகள் கூறுகின்றன. சிம்ம முக கொற்றவை என்று பிரத்யங்கராவையும் எரிசின கொற்றவை என நிகும்பலா தேவியும் கொற்றவை என்று மகாகாளியும் சோழர் காலத்தில் வணங்கப்பட்டனராம். விஜயாலயச் சோழன் தஞ்சையின் எட்டு மூலைகளிலும் எட்டு காளிக் கோவிலை அமைத்து அங்கு விசேஷ வழிபாடுகளும் ஹோமங்களும் நடத்தினார். அதன் பலனாக இழந்த சோழ சாம்ராஜ்ஜியத்தை மீட்டார் என்றும் சில சரித்திர ஆய்வாளர்கள் கூறுகின்றனர். சோழர்களின் குலதேவியாகவே கொற்றவை விளங்கினாள். குலோத்துங்க சோழனின் காலத்திலும் இந்த நிகும்பலா ஹோம வேண்டுதல் தொடர்ந்தன என்பதற்குச் சான்றாக கும்பகோணம் அடுத்த தாராசுரம் வீரபத்திரர் கோயில் அமைந்துள்ளது.
வெகு அபூர்வமான இந்த ஹோமத்தை ஏன் தாராசுரம் வீரபத்திரர் கோயிலை நடத்த வேண்டும்!
வீரபத்திரரும் மகாகாளியும் பிரத்யட்சயமாகத் தோன்றி ஒட்டக்கூத்தருக்கும் ரவணச் சித்தருக்கும் அருளிய தலம். காளி அன்னை சிரித்தபடியே காட்சி அருளும் திருத்தலம். ஒட்டக்கூத்தர், ரவண சித்தர் ஜீவசமாதி அடைந்த தலம். அக்கமாதேவியார் தவமிருந்த திருத்தலம். இப்படி பல பெருமைகள் கொண்டது கும்பகோணம் அடுத்த தாராசுரத்தில் அமைந்துள்ள வீரபத்திரர் ஆலயம். பஞ்ச குரோச தலங்களில் இதுவும் ஒன்று. பத்ரகாளியும் வீரபத்திரரும் ஆணவம் கொண்ட தட்சனின் யாகத்தை அழித்து, தட்சனை ஒழித்து இங்கே வந்து கோயில் கொண்டனர் என்கிறது தலவரலாறு.

காளியும் பிரத்யங்கரா தேவியும் நிகும்பலா தேவியும் ஒருசேர காட்சி தந்து ஒட்டக்கூத்தருக்கு அருளிய தலம் என்பதால் இந்த வீரபத்திரர் ஆலயம் சிறப்பான நிகும்பலா ஹோமத்துக்குரிய தலமாக விளங்குகிறது. மேலும் இங்கு மட்டுமே காளி அன்னை சிரித்தபடி காட்சி அளிக்கிறாள். காளி இங்கிருந்தபடியே தாராசுரம் சிவன் கோயிலில் நடைபெற்ற ஒட்டக்கூத்தரின் தக்கயாக பரணி அரங்கேற்றத்தை கேட்டு மகிழ்ந்தாளாம். அதனால் புன்னகைத்தபடி ஒட்டக்கூத்தரை ஆசிர்வதித்து அருளினாளாம். எனினும் அமாவாசை இரவுகளில் நடைபெறும் நிகும்பலா ஹோமம் உக்கிரம் பெற பெற இந்த காளியின் திருமுகம் சிவந்து உக்கிரமாவதை இப்போதும் காணலாம் என்பது அதிசயம். மிளகாயின் உக்கிரத்தை தான் தாங்கி, சுற்றி இருப்பவர் ஒருவருக்கும் ஒரு சிறிய நெடி கூட வராமல் பார்த்துக் கொள்பவள் இந்த உக்கிர தேவி. எனவே தான் இந்த கோயிலில் இந்த ஹோமத்தை நடத்த விரும்பினோம்.

ஆனி அமாவாசை நாளில் (24-6-2025) சக்தி விகடனும் தாராசுரம் வீரபத்திரர் ஆலய நிர்வாகமும் இணைந்து நிகும்பலா யாகம் நடத்தவுள்ளோம். அமாவாசை இரவில் நடைபெறும் நிகும்பலா ஹோமத்தில் கலந்து கொண்டால் நீண்ட ஆயுளும் நீங்காத ஆரோக்கியமும் நிறைந்த செல்வமும் கிட்டும் என்பது ஐதீகம்.
எதிரிகள் தொல்லை நீங்கும், தீய பழக்கங்கள் ஒழியும். கெட்டவர் சகவாசம் நீங்கும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். மனநிம்மதி கிடைக்கும். இழந்த பதவி மீண்டும் கிடைக்கும். உத்தியோக உயர்வு-புதிய வேலை வாய்ப்பு உண்டாகும், வியாபாரம், தொழில் சிறக்கும். திருமணம்-பிள்ளைப்பேறு போன்ற மங்கல விஷயங்கள் வாய்க்கும். எந்தவித எதிர்மறை எண்ணங்களும் உங்களைத் தாக்காது. செய்வினை-சித்து போன்ற அற்ப விஷயங்கள் உங்களை பாதிக்காது.
எனவே எத்தனை துன்பம் வந்தாலும் கலங்காதீர்கள். நம்பிக்கையோடு இந்த ஹோமத்தில் கலந்து கொள்ளுங்கள். அன்னை காளியின் இருக்க கவலை வேண்டாம்!
முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 – 66802980/07
ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.
NIGUMBALA HOMAM QR CODE FOR REGISTRATION

வாசகர்கள் கவனத்துக்கு:
இந்த ஹோமத்தில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், ஹோமத்துக்கான சங்கல்பக் கட்டணம் (ரூ.500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஹோம சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், ஹோம வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு பஸ்பம், குங்குமம் மற்றும் விசேஷ ரட்சை அனுப்பிவைக்கப்படும் (தமிழகம் – புதுவை பகுதிகளுக்கு மட்டும்). தற்போதைய சூழலில், அரசு வழிகாட்டுதல் நெறிமுறைப்படி வழிபாடுகள் வழிபாடுகள் நிகழவுள்ளன. ஆகவே, வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம். https://www.facebook.com/SakthiVikatan