
தாம்பரம்: தாம்பரம் மாநகர காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்களில் பணியாற்றி வந்த 27 ஆய்வாளர்களை பணி இடம் மாற்றம் செய்து தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அபின் தினேஷ் மோடக் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து தாம்பரம் மாநகர காவல் ஆணையரகத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது; குரோம்பேட்டை சட்டம் -ஒழுங்கு ஆய்வாளர் ராஜ சேகரன், செம்மஞ்சேரி சட்டம் -ஒழுங்கு ஆய்வாளராகவும், கண்ணகி நகர் சட்டம் – ஒழுங்கு ஆய்வாளர் தயால், குரோம்பேட்டை சட்டம் – ஒழுங்கு ஆய்வாளராகவும், பள்ளிக்கரணை மதுவிலக்கு அமலாக்க பிரிவு ஆய்வாளர் நடராஜ், கண்ணகி நகர் சட்டம் – ஒழுங்கு ஆய்வாளராகவும், பல்லாவரம் சட்டம் மற்றும் ஒழுங்கு ஆய்வாளர் தினேஷ், பள்ளிக்கரணை மதுவிலக்கு அமலாக்க பிரிவு ஆய்வாளராகவும், ராணிப்பேட்டை பகுதியில் இருந்து பழனிவேல் என்பவர் பல்லாவரம் சட்டம் – ஒழுங்கு ஆய்வாளராகவும்,