
சென்னை: சைபர் செக்யூரிட்டி குறித்து ராணுவ அதிகாரிகளுக்கு பயிற்சி அளிப்பதற்காக அதிகாரிகள் பயிற்சி மையம் மற்றும் எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
இந்திய ராணுவத்தின் முதன்மை பயிற்சி நிறுவனமான சென்னை பரங்கிமலையில் உள்ள அதிகாரிகள் பயிற்சி அகாடமி (ஒடிஏ) மற்றும் சென்னை எஸ்ஆர்எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் இடையே நேற்று புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.