
புதுடெல்லி: நாட்டின் தனிநபர் வருமான உயர்வை பொறுத்தவரை, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் 10 ஆண்டு கால உயர்வைவிட, காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் 10 ஆண்டு கால உயர்வு அதிகம் என்று முன்னாள் நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "இந்தியாவின் தனிநபர் வருமானம் 2013-14-ஆம் ஆண்டில் 1438 அமெரிக்க டாலர்களிலிருந்து 2024-இல் 11 ஆண்டுகளில் 2880 அமெரிக்க டாலர்களாக இரட்டிப்பாகியுள்ளது என்று நிதி ஆயோக்கின் தலைமை நிர்வாக அதிகாரி ஊடகங்களுக்குத் தெரிவித்தார். பொதுவாகப் பார்க்கும்போது அவர் சொன்னது சரிதான், நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இருப்பினும், அவர் முழு தகவல்களையும் கொடுத்திருக்க வேண்டும்.