• May 26, 2025
  • NewsEditor
  • 0

விகடன் வாசகர்களை எழுத்தாளர்களாக்கும் சிறு முயற்சிதான் My Vikatan!

யுஜிசி முன்னெடுப்பை அறிமுகப்படுத்தி, எழுத்தின் மீது ஆர்வம் கொண்ட படைப்பாளிகளுக்கு களம் அமைத்து கொடுப்பதில் பெருமை கொள்கிறது `மை விகடன்’

கடந்த மாதம், வாசகர்கள் மாதாந்திர தலைப்பை மையப்படுத்தி கட்டுரைகள் அனுப்பலாம் என அறிவிக்கப்பட்டது. அதன்படி “Travel Contest – பயணக் கட்டுரை” என்ற தலைப்பில் வாசகர்கள் கட்டுரைகள் அனுப்பினர். வாசகர்களிடமிருந்து மகத்தான வரவேற்பு கிடைத்தது.  

நூற்றுக்கணக்கான வாசகர்கள் தங்கள் சுற்றுலா அனுபவங்களை அனுப்பி இருந்தனர். உள்ளூர் ஊட்டி தொடங்கி போர்சுகல், கம்போடியா, போலாந்து, ஸ்விஸ், துபாய் என பல நாடுகளின் சுற்றுலா அனுபவங்களை சுவாரஸ்யம் குறையாமல் பகிர்ந்திருந்தனர்.

Travel Contest போட்டியில் பிரசுரிக்கப்பட்ட கட்டுரைகளை படிக்க… Click Here

இந்தப் போட்டியில் பங்கேற்ற ஒவ்வொரு வாசகருக்கும் எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். பயணம் மற்றும் கதைசொல்லல் மீதான உங்களின் ஆர்வம் உண்மையிலேயே வியப்புக்குரியதாக இருந்தது. பலரின் பயணக் கதைகள், புகைப்படங்கள் மற்றும் உணர்வுப்பூர்வமான அனுபவங்கள் எங்களை மெய்சிலிர்க்க வைத்தன. ஒவ்வொரு கட்டுரையும் ஒவ்வொரு பயணக் கதையை விவரித்தது. 

தற்போது போட்டியின் வெற்றியாளர்களை அறிவிக்கும் முக்கிய கட்டத்தை நெருங்கிவிட்டோம். சுற்றுலா கட்டுரைக்கானப் போட்டியில் முதல் மூன்று இடங்களை பிடித்த வெற்றியாளர்களை எங்கள் ஆசிரியர் குழு தேர்வு செய்துள்ளது. 

முதல் பரிசு : ரூ. 2,500 (2 வெற்றியாளர்கள்)

கடுங் குளிர், தங்க நகரம், பிரமாண்ட கோட்டை! – ஜெய்சால்மர் பாலைவன பூமியின் அழகியல் : ராஜஸ்ரீ செல்வராஜ்

ராஜஸ்ரீ செல்வராஜ்

யானையா, யானைக்கூட்டமா? – வெள்ளியங்கிரி மலையில் ஏற்பட்ட திக் திக் சிரிப்பனுபவம் : தர்மராஜகுரு கலையரசன் 

தர்மராஜகுரு கலையரசன்

இரண்டாம் பரிசு : ரூ. 1000 (5 வெற்றியாளர்கள்)

இந்த யானைகள் யாரையும் தாக்கியதில்லை” – தென்னாப்பிரிக்க சுற்றுலாவில் திக் திக்! : வெ.பாலமுரளி

வெ.பாலமுரளி

‘வழி தவறி நுழைந்த அடர் காடு; களிறுகளின் கால் தடம்’ – பரம்பிக்குளம் திரில் அனுபவம் : கிருபாகரன் குமார்

கிருபாகரன் குமார்

கனவு தேசமான அமெரிக்கா நிஜத்தில் எப்படி இருக்கிறது? – ஒரு ‘கூல்’ ஆன பயண அனுபவம் : மனோகர் மைசூரு

மனோகர் மைசூரு

மனதைக் கனமாக்கிய ‘காலா பாணி’ சிறை – ஒரு விரிவான அந்தமான் சுற்றுலா அனுபவம் – பாகம் 1 : எஃப்.எம்.பொனவெஞ்சர்

எஃப்.எம்.பொனவெஞ்சர்

எங்களுக்காக மாலையைக் கழற்றிய ஐயப்ப பக்தர்கள்! – மறக்கவே முடியாத மும்பை பயணம் : கு. ஹேமலதா

கு. ஹேமலதா

மூன்றாம் பரிசு: ₹500 (10 வெற்றியாளர்கள்)

‘இந்திய வரலாற்றின் கருவறை’ – காந்தி விட்டுச்சென்ற சபர்மதி ஆசிரமம் எப்படி இருக்கிறது? : காயத்ரி சுவாமிநாதன்

 `சுற்றுLaw’ – விடுதி டு உணவு… சுற்றுலாப் பயணிகளின் உரிமைகளை அறிந்து கொள்ளுங்கள்! : அருண் கார்த்திக் வே.அ.,

அருண் கார்த்திக் வே.அ

மலைகளுக்கு நடுவே பறந்து விரிந்து நிற்கும் நீர்த்தேக்கம் – `வாவ்’ வால்பாறை! : சி.அ.அய்யப்பன்

சி.அ.அய்யப்பன்

மலையேற்றம், மடங்கள், புனித நீர்வீழ்ச்சி – அழகு நிறைந்த அருணாச்சல் : தி.பெருமாள்

தி.பெருமாள்

‘உப்புச் சுரங்கம்; சாகச தீம் பார்க்; விமான மியூசியம்’ – பிரமிப்பான போலாந்து சுற்றுலா : ரெ.ஆத்மநாதன்

ரெ.ஆத்மநாதன்

 பஸ் பிரேக் டவுன், கண்முன்னே வெள்ளிப் பனி‌மலை – சிலிர்க்க வைத்த `குலு மணாலி’ : வினு ஷாஹாபுரம்

வினு

BARTER முறையை பின்பற்றும் பாலி குரங்குகள் – சுவாரஸ்ய அனுபவம்! :  வி.ரத்தினா

வி.ரத்தினா

பாண்டி டு பாரீஸ்! – நடைமுறை என்ன? சுத்தி பார்க்க வேண்டிய இடங்கள் என்னென்ன? : S.ரகுபதி

S.ரகுபதி

அயல்நாடு செல்வோர் முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டியவை! – அனுபவப் பகிர்வு : கே.என்.சுவாமிநாதன்

கே.என்.சுவாமிநாதன்

 `முடியை கலர் செய்ய ரூ.9,000!’ : சிங்கார சிங்கப்பூர் கொடுத்த த்ரில் அனுபவம் : ஹரிஹரன் சங்கர்

ஹரிஹரன் சங்கர்

தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து வெற்றியாளர்களுக்கும் எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்.  இந்தப் போட்டியில் பங்கேற்ற ஒவ்வொரு வாசகருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். உங்கள் அனைவருக்கும் இந்த போட்டியில் பங்கேற்ற சான்றிதழ் விரைவில் அனுப்பிவைக்கப்படும்.

பங்கேற்ற அனைத்து வாசகர்களும், உங்கள் பயண நினைவுகளை மீட்டெடுத்து, பகிர்ந்து கொண்டீர்கள். நீங்கள் கொடுத்த, தொடர்ந்து கொடுத்துக்கொண்டு இருக்கும் வரவேற்பு, இந்த `Travel Contest’- ஐ மீண்டும் நடத்த எங்களை உந்தி தள்ளியிருக்கிறது. ஆமாம், `Travel Contest’ சீசன் 2-க்கு தயாராகுங்கள்.

தொடர்ந்து உங்கள் உள்ளுர் வெளியூர், வெளிநாடு பயண அனுபவங்களை எங்களிடம் பகிருங்கள். பரிசை அள்ளுங்கள்…!

சுற்றுலா என்கிற தலைப்பில் My Vikatanக்கு உங்களது கட்டுரை படைப்புகளை அனுப்பலாம். நீங்க சுற்றுலா போன அனுபவமாக இருக்கலாம், பார்க்க வேண்டிய தலங்களாக இருக்கலாம், சுற்றுலா போகும் போது செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்த தகவல்களாகவும் இருக்கலாம். ஆனால், உங்களின் சொந்த படைப்பாக, இதுவரை எந்த தளத்திலும் வெளிவராத படைப்பாக இருக்க வேண்டும், புகைப்படங்களுடன் அனுப்பவேண்டும். தேர்வு செய்யப்படும் கட்டுரைகள் அனைத்தும் பிரசுரம் ஆகும்.

நினைவில் கொள்க: 

  • நீங்க கட்டுரையை அனுப்ப வேண்டிய கடைசி நாள் ஜூன் 30

  • ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கட்டுரைகளை அனுப்பலாம்.

  • உங்கள் படைப்புகளை: my@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்

  • விகடனுக்கு என்று பிரத்யேகமாக அனுப்பப்படும் கட்டுரைகள் மட்டுமே பரிசீலிக்கப்படும்

  • உங்கள் படைப்பை திருத்தவோ, பிரசுரிக்கவோ, நிராகரிக்கவோ முழு உரிமையும் விகடனுக்கு இருக்கிறது. 

  • கட்டுரையின் தரத்தின்  அடிப்படையில் வெற்றியாளர்கள் விகடன் நடுவர் குழுவால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

my vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *