
பாடலாசிரியர் சிநேகன் – கன்னிகா தம்பதிக்கு கடந்த 2021-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றிருந்தது. இந்தாண்டு ஜனவரி மாதம் இந்த தம்பதிக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தார்கள்.
கமல் ஹாசன் இந்த இரட்டை பெண் குழந்தைகளுக்கு காதல், கவிதை எனப் பெயர் சூட்டியிருந்தார்.
அது குறித்து அப்போது அவர்கள், “காதலர் தினத்தில், எங்கள் தங்க மகள்களுக்குத் தங்க வளையல்களோடு, காதல் என்ற பெயரையும் கவிதை என்ற பெயரையும் அணிவித்து வாழ்த்திய, நம்மவர் எங்களின் அன்புத் தலைவர் பத்ம பூஷன் கமல்ஹாசன் அவர்களுக்கு, எங்கள் அன்பின் நன்றிகள்.
நீங்களும் வாழ்த்துங்கள் காதல்-கவிதையை.” என நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருந்தனர். இந்த தம்பதி இன்று தங்களுடைய குழந்தைகளின் புகைப்படத்தை சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு பதிவிட்டிருக்கிறார்கள்.

அந்தப் பதிவில் அவர்கள், “எங்கள் அன்பிற்குரிய ஊடக நண்பர்களுக்கும், திரையுலக உறவுகளுக்கும் வணக்கம். எங்கள் மகள்கள் காதல் கன்னிகா சிநேகன் மற்றும் கவிதை கன்னிகா சிநேகனை உங்களுக்கு அறிமுகம் செய்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம்.
எங்களை நேசிக்கும் உங்கள் அன்பு, எங்கள் மகள்களையும் நேசிக்கட்டும்!” எனக் குறிப்பிட்டு பதிவிட்டிருக்கிறார்கள்.