
சென்னை: திருவேற்காட்டில் விளையாட்டுத் திடலை அழித்து கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதா? என்றும் தமிழக அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னையை அடுத்த திருவேற்காடு நகராட்சிக்குட்பட்ட கோலடி கிராமத்தில் 13 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கும் மாந்தோப்பு விளையாட்டுத் திடலை சீரழித்து, அதில் 8.48 ஏக்கர் பரப்பளவில் பாதாள சாக்கடை மற்றும் கழிவுநீர் சுத்திகரிக்கும் நிலையம் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த திருவேற்காடு நகராட்சி தீர்மானித்துள்ளது.