
மேட்டுப்பாளையம்: கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் கடந்த இரு நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக, கோவையை அடுத்த மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
இதனிடையே, கனமழை காரணமாக மேட்டுப்பாளையம் – கோத்தகிரி சாலையில், முதலாம் கொண்டை ஊசி வளைவு அருகே, சாலையோரம் இருந்த மரம் (மே 26) இன்று முறிந்து சாலையின் குறுக்கே விழுந்தது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.