
சென்னை: உதட்டில் ஏற்பட்ட வீக்கத்துக்கு சிகிச்சை பெற சென்ற சிறுவனின் ஆண் குறியில் ஆபரேஷன் செய்ததால், மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதுதொடர்பாக மருத்துவமனையின் மருத்துவம் மற்றும் செவிலியரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை ஐஸ்அவுஸ் பகுதியில் பிரபலமான தனியார் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில், உதட்டில் ஏற்பட்ட வீக்கத்துக்காக 9 வயது சிறுவன் ஒருவன் அனுமதிக்கப்பட்டான். அந்த சிறுவனுக்கு மருத்துவரும், செவிலியரும் சிகிச்சை அளித்துள்ளனர். சிகிச்சைக்கு பின்னர் அந்த சிறுவன் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டான். அப்போதுதான் அந்த சிறுவனுக்கு உதட்டில் ஏற்பட்ட காயத்துக்காக ஆண் உறுப்பில் ஆபரேஷன் செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.