
புதுடெல்லி: உத்தரப்பிரதேசம் வாராணசியில் மந்திரங்கள் மூலமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது. முதல்முறையாக மே 25-ல் தொடங்கிய இந்த முகாமுக்கு முதல் நாளில் 42 நோயாளிகள் வந்திருந்தனர்.
மந்திரங்களின் சக்தியை மக்களிடம் பரப்புவதற்காக காசி எனும் வாராணசியில் முதன்முறையாக மந்திர சிகிச்சை தொடங்கப்பட்டுள்ளது. 21 நாள் மந்திர சிகிச்சை முகாமில், நோயாளிகளுக்கு 3,000 மந்திரங்கள் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகின்றன.