
சென்னை: தமிழக முதல்வரின் டெல்லி பயணம் திமுக, பாஜக இடையேயான மறைமுக கூட்டும், பேர அரசியலும் வெளிச்சத்துக்கு வந்துவிட்டதையே காட்டுவதாக தவெக தலைவர் விஜய் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்த அறிக்கை: ஊழல் செய்தவர் மீது நடவடிக்கை பாயும்போது உடனடியாக அவர் டெல்லிக்கு பயணம் மேற்கொண்டால், அவர் எந்த ஊழலையும் செய்யாதவர் போல அனைத்தும் மறைக்கப்படும் என்பதை நிரூபிக்கும் வகையில் அமைச்சர்கள் பலரை தொடர்ந்து தற்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் டெல்லி பயணம் அமைந்துள்ளது.